புஷ்பா 2 படத்தின் வெற்றிக்கு காரணம் அல்லு அர்ஜுன் இல்லை! வேறு யார் தெரியுமா?

Reason For Pushpa 2 The Rule Movie Success : அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருக்கும் படம், புஷ்பா 2. இந்த படம், இந்த ஆண்டின் இமாலைய வெற்றிப்படங்களுள் ஒன்றாக இருக்கிறது. இப்படத்தின் இந்த வெற்றிக்கு என்ன காரணம் தெரியுமா? 

Written by - Yuvashree | Last Updated : Dec 11, 2024, 03:14 PM IST
  • புஷ்பா 2 படம், பெரிய ஹிட் அடித்துள்ளது
  • இந்த வெற்றிக்கு காரணம் அல்லு அர்ஜுன் மட்டுமல்ல
  • வேறு யார் தெரியுமா?
புஷ்பா 2 படத்தின் வெற்றிக்கு காரணம் அல்லு அர்ஜுன் இல்லை! வேறு யார் தெரியுமா?  title=

Reason For Pushpa 2 The Rule Movie Success : இந்திய சினிமாவில் புதிய சாதனை படைத்த படமாக விளங்கி வருகிறது புஷ்பா 2: தி ரூல் திரைப்படம். அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடித்திருக்கும் இந்த படத்தில், அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். இந்த படத்தின் வெற்றிக்கு திரைக்கதை, பெரிய அளவிளான ப்ரமோஷன், அல்லு அர்ஜுன் உள்ளிட்டோர் முக்கிய காரணமாக இருந்தாலும், இன்னொருவரும் இதற்கு பெரிய காரணமாக விளங்குகிறார். அவர் யார் தெரியுமா? 

புஷ்பா 2:

2021ஆம் ஆண்டு, புஷ்பா 1: தி ரைஸ் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை சுகுமார் இயக்க, அல்லு அர்ஜுனும் ராஷ்மிகா மந்தனாவும் நாயகன்-நாயகியாக நடித்திருந்தனர். இப்படம் வந்த போது, இது இவ்வளவு பெரிய ஹிட் அடிக்கும் என்பதை யாருமே எதிர்பார்க்கவில்லை. 

சந்தன மரக்கடத்தல் தொழிலில், புதிதாக இணையும் புஷ்பா, ஓவர் நைட்டில் ரவுடிகளை மிஞ்சும் அளவிற்கு பிரபலமாக, அவனுக்கு கீழும் ஒரு குழு வேலை செய்ய தொடங்குகிறது. இதை வைத்துதான், புஷ்பா 2 படமும் எடுக்கப்பட்டிருக்கிறது. முதல் பாகத்தில் தனது தொழிலில் வளரும் தருவாயில் இருந்த புஷ்பா, இரண்டாம் பாகத்தில் பெரிய டான்-ஆகவே மாறிவிடுகிறான். 

சரியான திரைக்கதை, எதிர்பார்க்காத திருப்பங்கள், ரசிகர்களை மகிழ்விக்கும் ராஷ்மிகா, அனல் பறக்க ஆக்ஷன் காட்சிகளில் நடிக்கும் அல்லு அர்ஜுன் என படம் முழுக்க மக்களுக்கு பிடித்த அம்சங்கள் நிரம்பியிருக்கின்றன. இவை அனைத்தும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம்தான். இருந்தாலும், இவர்கள் அல்லாமல், இன்னொருவரையும் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக சிலர் குறிப்பிட்டு வருகின்றனர்.

யார் அவர்? 

தென்னிந்திய திரையுலகிற்கே, ட்ரெண்ட் செட்டராக மாறியவர் ராஜ மெளலி. ‘மகதீரா’ படம் மூலம் மறு-ஜென்மம் கான்செப்டை புதுமையாகவும் பிரம்மாண்டமாகவும் காண்பித்த இவர், தனது பாகுபலி படம் மூலம் உலகளவில் புகழ் பெற்ற இயக்குநராக மாறினார். 

தென்னிந்தியாவை பொருத்தவரை, அவ்வளவாக ஒரு படம் வந்து விட்டால் அதற்கு இரண்டாம் பாகம் வருவது அரிதானதுதான். அப்படியே இரண்டு மற்றும் மூன்றாம் பாகங்கள் வெளியானாலும் அவை ரசிகர்களை கவருமா என்பது சந்தேகம்தான். ஆனால், அதை உடைத்தெரிந்தவர் ராஜமெளலி. 

Rajamouli

இவரது பாகுபலி படம் உலகளவில் 600 முதல் 650 கோடி வரை வசூலித்தது. இந்த ரிலீஸிற்கு அடுத்து 2 ஆண்டுகள் இடைவேளையில் வெளியானது, பாகுபலி 2 ஆம் பாகம். முதல் பாகம் ஹிட் என்றால், இரண்டாம் பாகம் சூப்பர்-டூப்பர் ஹிட் அடித்தது. இந்த படம், உலகளவில் சுமார் ரூ.1,800 காேடிக்கும் மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது. 

இப்படி, இரண்டாம் பாகம் படங்கள் வருவதற்கு வழி வகுத்து கொடுத்தவர் ராஜமெளலி. தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் புஷ்பா படத்தின் 2ஆம் பாகத்தின் மீது, பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் எழுவதற்கும், இது ரசிகர்களை சரியாக சென்றடைவதற்கும் ராஜமெளலி பெரிய காரணமாக இருப்பதாக திரைப்பட விரும்பிகள் கூறுகின்றனர். 

புஷ்பா 2 செய்த சாதனை!

இந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களாக இருக்கும் ஷாருக்கான், சல்மான் கான், ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்டோர் படங்கள் செய்யாத சாதனையை அல்லு அர்ஜுன் நடித்திருக்கும் புஷ்பா 2 படம் செய்திருக்கிறது. இப்படம், வெளியான 6 நாட்களுக்குள் உலகளவில் 1000 கோடி வசூல் செய்ய இருக்கிறது. இதனால் படக்குழுவினர் மட்டுமன்றி, ஒட்டுமொத்த தெலுங்கு திரையுலகமே மகிழ்ச்சியில் உள்ளது. 

மேலும் படிக்க | புஷ்பா 2: அம்மாடியோவ்! 6 நாட்களில் இத்தனை கோடி வசூலா..? எவ்வளவு தெரியுமா?

மேலும் படிக்க | புஷ்பா 2: ராஷ்மிகாவுக்கு பதில் நடிக்க இருந்த 37 வயது நடிகை! யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News