தனுஷ் அணிந்திருந்த ஹூடி விலை இவ்வளவா?

Dhanush hoodie: தனுஷ் அணிந்திருந்த விலை உயர்ந்த ஹூடி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 20, 2022, 04:40 PM IST
  • மும்பையில் தென்பட்ட தனுஷ்
  • காஸ்டிலியான உடையை அணிந்திருந்தார்
  • அவர் அணிந்திருந்த ஹூடியின் விலை
தனுஷ் அணிந்திருந்த ஹூடி விலை இவ்வளவா? title=

Dhanush hoodie: தனுஷ் Netflix-ன் ஆக்‌ஷன்-த்ரில்லர் திரைப்படமான 'தி கிரே மேன்'-ல் நடித்திருக்கிறார். உலகம் முழுவதும் இருந்து பல பெரிய நட்சத்திரங்கள் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர். விரைவில் ரிலீஸாக இருக்கும் இந்தப் படத்துக்கு உலகம் முழுவதும் பிரம்மாண்ட புரோமோஷன்கள் நடைபெற்று வருகிறது. மும்பையிலும் ‘தி கிரே மேன்’ புரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக மும்பை சென்ற அவர், காஷூவலான நீல நிற பர்பெர்ரி ஹூடியை. வெள்ளை ஜாகர்களுடன் அணிந்து ஸ்டைலாக வந்தார். அவரின் இந்த லுக் ஸ்டைலாக இருந்ததால் ரசிகர்களின் கவனத்தை பெற்ற நிலையில், இப்போது தனுஷ் அணிந்திருந்த ஹூடியையும் தேடத் தொடங்கியிருக்கின்றனர். 

மேலும் படிக்க | PUSHPA PART 3: ஒன்னு இல்ல, ரெண்டுள்ள மூணாவது பார்ட்டும் உண்டு: அதிரடி காட்டும் புஷ்பா

ஒரு ஹூடியின் விலை 

தனுஷ் அணிந்திருந்த ஹூடியின் விலை சுமார் ரூ.67,000 என கூறப்படுகிறது. இப்படியான ஹூடியை வாங்கி அணிய வேண்டும் என்பது உடை மீது பிரியம் கொண்ட பலரின் விருப்பமாக இருக்கிறது. காஸ்டிலி மற்றும் பிராண்ட்டான ஹூடி, தனுஷூக்கு மிகவும் பொருத்தமாக இருப்பதாகவும் ரசிகர்கள் கமெண்ட் அடித்துள்ளனர். 

’தி கிரே மேன்' படத்தில் 'அவிக் சான்' என்ற கொலையாளி கேரக்டரில் தனுஷ் நடித்திருக்கிறாராம். சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற பிரம்மாண்டமான புரோமோஷன் நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார். அவருடைய கதாப்பாத்திரம் மிகவும் சிறியது என்றாலும், முக்கியமான ரோல் என கூறப்படுகிறது. இந்தப் படத்தில் அவருடன் இணைந்து ரியான் கோஸ்லிங், கிறிஸ் எவன்ஸ், ஜெசிகா ஹென்விக் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். 

மேலும் படிக்க | திருமணச் செலவைத் திருப்பிக் கேட்கும் Netflix? - நடிகை நயன்தாராவுக்கு நோட்டீஸ்?

'தி கிரே மேன்' ஜூலை 22 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் ரிலீஸ் செய்யப்படுகிறது. ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்கு முன்பு பாலிவுட்டில் ‘அத்ராங்கி ரே’ படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் தனுஷூடன் சாரா அலி கான் மற்றும் அக்‌ஷய் குமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். ஆனால், படம் ரசிகர்களுக்கு பெரிதாக பிடிக்கவில்லை. விரைவில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடிக்கவுள்ளார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News