கேப்டன் மில்லர் Vs. அயலான்: வசூலில் லீடிங் யார்? மக்கள் ஆதரவு கொடுத்த படம் எது?

Captain Miller and Ayalaan Box Office Collection: பொங்கலை முன்னிட்டு நேற்று ஒரே நாளில் 4 தமிழ் படங்கள் வெளியானதை தொடர்ந்து, பாக்ஸ் ஆபிஸில் எந்த படம் முன்னணியில் இருக்கிறது தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Jan 13, 2024, 10:45 AM IST
  • அயலான், கேப்டன் மில்லர் படம் நேற்று வெளியானது.
  • இத்துடன் சேர்த்து 4 படங்கள் வெளியானது.
  • உண்மையான பொங்கல் வின்னர் யார்?
கேப்டன் மில்லர் Vs. அயலான்: வசூலில் லீடிங் யார்? மக்கள் ஆதரவு கொடுத்த படம் எது?  title=

தமிழ் சினிமாவின் ‘டாப்’ நடிகர்கள் அனைவருமே பெரிய பண்டிகைகளை குறிவைத்து தங்களது படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 4 தமிழ் படங்கள் வெளியானது. அதில் ரசிகர்கள் மத்தியில் நன்கு கவனம் ஈர்த்த இரண்டு படங்கள்தான், கேப்டன் மில்லர் (Captain Miller) மற்றும் அயலான் (Ayalaan). 

கேப்டன் மில்லர்:

அருண் மாத்தேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் (Dhanush Captain Miller ) ஹீரோவாக நடித்துள்ள படம், கேப்டன் மில்லர். இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து கன்னட நடிகர் சிவராஜ் குமார், தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன், பிரியங்கா மோகன், அதிதி பாலன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக நடைப்பெற்று வந்தது. அது மட்டுமன்றி, இப்படத்தின் கதை, உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதனால், கேப்டன் மில்லர் படம் மீது ரசிகர்களுக்கு அதீத எதிர்ப்பார்ப்பு எழுந்தது. 

அயலான்:

சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) ஹீரோவாக நடித்துள்ள படம், அயலான். இந்த படத்தில் ஒரு ஏலியனும் இவரும்தான் முக்கிய கதாப்பாத்திரங்கள். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் இப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ஆர். ரவிகுமார் இயக்கியுள்ளார். இவர், ஏற்கனவே ‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கி பிரபலமானவர். அயலான் படத்தில் வரும் ஏலியனுக்கு நடிகர் சித்தார்த் வாய்ஸ் கொடுத்துள்ளார். இந்த படத்தின் கிராஃபிக்ஸ் மற்றும் விஎஃப்எக்ஸ் பணிகள் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக நடைப்பெற்று வந்தன. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் (AR Rahman Ayalaan) இசையமைத்திருக்கிறார். படத்தின் ப்ரமோஷன்களின் போதே, நடிகர் சிவகார்த்திகேயன் படம் குழந்தைகளுக்கு பிடிக்கும்படி வந்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார். அந்த வைகையில், இந்த படம் குடும்ப ரசிகர்களை தியேட்டர் பக்கம் இழுத்துள்ளது. 

இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்:

அயலான் திரைப்படம், முதல் நாள் ரிலீஸில் ஒரளவிற்கு நல்ல விமர்சனங்களையும் ரசிகர்களின் வரவேற்பினையும் பெற்றுள்ளது (Ayalaan Movie Review). ரிலீஸான முதல் நாளில், அயலான் படம் இந்தியாவில் மட்டும் 4 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இரண்டாம் நாளான இன்று, கொடுக்கப்பட்டிருக்கும் தியேட்டர்களில் புக்கிங் ஆகிவிட்டதாகவும் இதனால் இன்றைய வசூலும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. அது மட்டுமன்றி, வார இறுதி நாட்கள், பொங்கல் பண்டிகை விடுமுறை 3 நாள் என வரிசைக்கட்டி நிற்கின்றன. அதனால் படத்தின் வசூலுக்கு இன்னும் 10 நாட்களுக்கு குறைவில்லை என்று கூறப்படுகிறது (Ayalaan Box Office Collection). 

மேலும் படிக்க | Dhanush Salary: ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடிக்க தனுஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு?

கேப்டன் மில்லர் (Captain Miller) திரைப்படம், ஒரு குறிப்பிட்ட ரசிகர்கள் கூட்டத்தையே கவர்ந்துள்ளது. படத்தில் தனுஷின் நடிப்பையும், அருண் மாத்தேஸ்வரனின் திரைக்கதையையும் எதிர்பார்த்து போனவர்கள் ஏமாந்து வீடு திரும்பியதாக விமர்சனங்கள் எழுந்தது (Captain Miller Review). சரமாரியான சண்டை காட்சிகள், ரத்தக்களரி, துப்பாக்கி சண்டையை தவிர படத்தில் வேறு ஒன்றும் பேசும்படியான அம்சமாக இல்லை என்று படம் பார்த்த ரசிரகர்கள் விமர்சனங்களை தெரிவித்திருந்தனர். ரிலீஸின் முதல் நாளான நேற்று, ஒதுக்கப்பட்டிருந்த தியேட்டர்களில் 80 சதவிகிதம் ஹவுஸ் புல் காட்சிகளாக இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அயலான் படத்தை விட, கேப்டன் மில்லர் படத்திற்கு முதல் நாளில் பல கோடி வசூலாகியுள்ளதாம். இப்பத்தின் முதல் நாள் வசூல் மட்டும், (உலகளவில்) ரூ. 15 கோடியை தாண்டியுள்ளதாக சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது (Captain Miller Box Office Collection). 

பொங்கல் வின்னர் யார்? 

கேப்டன் மில்லர் மற்றும் அயலான் ஆகிய இரண்டு படங்களை பார்ப்பதற்குமே ரசிகர்கள் திரையரங்கிற்கு படையெடுத்து சென்று கொண்டுதான் இருக்கின்றனர். இன்னும் 5 நாட்கள் கடந்த பிறகு இவ்விறு படங்களில் எந்த படத்திற்கு அதிக வசூல் என்பது தெரியவரும். இந்த இரண்டு படங்கள் மட்டுமன்றி, அருண் விஜய்யின் மிஷன் சேப்டர் 1 படமும் (Mission Chapter 1), விஜய் சேதுபதியின் மெர்ரி கிறிஸ்துமஸ் (Merry Christmas) படமும் கூட வெளியானது. இந்த இரு படங்களுக்கும் நல்ல விமர்சனங்களே வந்துள்ளன. 

மேலும் படிக்க | கேப்டன் மில்லர் Vs. அயலான்-எதை முதலில் பார்க்கலாம்? ரசிகர்களை கவர்ந்த படம் எது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News