'மாநாடு' வெற்றிக்கு பிறகு இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியீட்டுக்கு தயாராக உள்ள திரைப்படம் 'மன்மத லீலை'. அசோக் செல்வன் நடித்துள்ள இந்த படத்திற்கு பிரேம்ஜி இசையமைத்துள்ளார். வெங்கட் பிரபுவின் 10-வது படமாக உருவாகியுள்ள 'மன்மத லீலை' திரைப்படத்தை ராக்ஃபோர்டு எண்டெர்டைன்மெண்ட் சார்பில் டி.முருகானந்தம் தயாரித்துள்ளார்.
இந்த நிலையில் 'மன்மத லீலை' படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என பிளையிங் ஹார்ஸ் எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில், 'இரண்டாம் குத்து' என்ற திரைப்படத்தின் விநியோக உரிமையை ராக் ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம், ரூ.4.85 கோடிக்கு வாங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில், ரூ.2.85 கோடியை வழங்கிய ராக்ஃபோர்ட் நிறுவனம் மீதமுள்ள ரூ.2 கோடியை வழங்கவில்லை என்றும் அதற்கு பதிலாக வினியோக உரிமையை திருப்பி தருவதாகவும், படத்தின் லாபத்தில் 40 சதவீதத்தை தரும்படியும் நஷ்டம் ஏற்பாட்டால் மீதமுள்ள தொகையை திரும்பி தருவதாகவும் ஒப்பந்தம் செய்ததாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | சர்ச்சையைக் கிளப்பிய மன்மத லீலை: எஸ்.ஜே.சூர்யாவைக் கை காட்டும் வெங்கட் பிரபு
படத்தால் ஏற்பட்ட நஷ்டம் 1,40, 42,732 ரூபாயை வழங்க வேண்டிய நிலையில், ராக் ஃபோர்ட் தயாரிப்பில் அசோக் செல்வம் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் 'மன்மத லீலை' என்ற படத்தை தயாரித்துள்ளதாகவும் ஏப்ரல் 1ஆம் தேதி வெளியாக இருப்பதாக பத்திரிக்கை, விளம்பரங்கள் மூலமாக தெரிய வந்ததாக பிளையிங் ஹார்ஸ் எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் மனுவில் குறிப்பிட்டுள்ளது. மேலும்,
தங்களுக்கு தர வேண்டிய தொகையை 2020 மே மாதம் முதல் ஆண்டுக்கு 24 சதவீத வட்டியுடன் 2,02,21,570 ரூபாயை வழங்காமல் 'மன்மத லீலை' படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம். சுந்தர் ரூ.30 லட்சத்தை 4 வாரங்களில் வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டுமென்ற நிபந்தனையுடன் 'மன்மத லீலை' படத்தை வெளியிட அனுமதி அளித்து உத்ததவிட்டுள்ளார். அதன் பிறகு 'இரண்டாம் குத்து' மற்றும் 'மன்மத லீலை' படங்களின் விவகாரங்களை சமரச தீர்வு மைய நடுவரிடம் நடத்த வேண்டுமெனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் படிக்க | எனக்கு கொரோனா வந்த நேரத்தில் முத்தக் காட்சியில் நடித்தேன்: அசோக் செல்வன்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR