Chiyaan 60 Update: அசத்தலான சியான் 60 அப்டேட் இதோ

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 10, 2021, 12:20 PM IST
Chiyaan 60 Update: அசத்தலான சியான் 60 அப்டேட் இதோ title=

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் படம் ‘சியான் 60’ (Chiyaan 60). இந்த படத்தில் நடிகர் விக்ரம் (Vikram) அவரது மகன் துருவ் விக்ரமும் முதன்முறையாக இணைந்து நடிக்கின்றனர். 

மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளர் லலித் குமார் சியான்60 படத்தை தயாரிதது வருகிறார். இந்த படத்தில் துருவ் விக்ரம் (Dhruv Vikram) ஒரு போலீஸ் அதிகாரியாக நடிப்பதாகவும் விக்ரம் ஒரு கேங்ஸ்டராக நடிப்பதாகவும் தகவல்கள் வெளியானது. கார்த்திக் சுப்புராஜின் வழக்கமான படையுடன் டார்ஜிலிங்கில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் (Santhosh Narayanan) இசையமைக்கிறார். இந்த படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கொரோனா ஊரடங்கு (Corona Lockdown) காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ALSO READ | மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன்: போஸ்டர் ரிலீஸ்

இந்நிலையில் தற்போது துருவ் விக்ரம் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்து உள்ளதாகவும் விக்ரம் சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டும் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு இப்படத்தின் தலைப்பு அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

விக்ரம் நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் கோபுரா, பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள் இறுதிகட்ட பணியில் இருப்பதால் சியான் 60 படத்தை முடித்துவிட்டு மற்ற படங்களில் கவனம் செலுத்துவார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.  சியான் 60 படத்தின் தயாரிப்பாளர்தான் கோபுரா படத்திற்கும் தயாரிப்பாளர் என்பதால் இரண்டு படங்களின் வெளியீடு தேதியும் கூடிய விரைவில் வெளியிடப்படும் என்று விக்ரம் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.  

துருவ் விக்ரம் இந்த படத்தின் வேலைகளை முடித்துவிட்டு அடுத்ததாக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.  இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தமிழ் திரையுலக வட்டாரங்களில் இருந்து செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

ALSO READ | பாலிவுட்டை மிஞ்சும் கோலிவுட்... 1000 கோடி வசூலில் தமிழ் சினிமா..!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News