பிக்பாஸ் சீசன் 6-ல் யார் யார்? கசிந்த போட்டியாளர்கள் பற்றிய தகவல்!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் விரைவில் தொடங்கவுள்ள நிலையில் நிகழ்ச்சியில் எந்தெந்த போட்டியாளர்கள் பங்குபெறுவர்கள் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Jul 17, 2022, 01:50 PM IST
  • பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விரைவில் தொடங்க உள்ளது.
  • இந்த சீசனில் யார் விளையாட போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு பெருகி உள்ளது.
  • மேலும் கமல் தொகுத்து வழங்குவாரா என்ற சந்தேகமும் உள்ளது.
பிக்பாஸ் சீசன் 6-ல் யார் யார்? கசிந்த போட்டியாளர்கள் பற்றிய தகவல்!  title=

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுள் ஒன்று தான் 'பிக் பாஸ்', இந்த நிகழ்ச்சி தொடங்கினாலே அடுத்த நூறு நாட்களுக்கு அனைவருக்கும் கன்டென்டுக்கு பஞ்சம் இருக்காது.  ஏனெனில் அந்த அளவுக்கு கண்டென்ட்டுகளை வாரி வழங்கும் வள்ளலாக இந்நிகழ்ச்சி அமைந்திருக்கும்.  காதல், மோதல், நட்பு, பாசம், கண்ணீர், கேலி, கூத்து என பல உணர்வுகளையும் இங்கு கண்டு ரசிக்கலாம்.  பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி சிலர் குறை கூறி வந்தாலும், அதனை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டுதான் இருக்கின்றது.  பல மொழிகளில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகி கொண்டிருந்தாலும் தமிழில் கடந்த 2017ம் ஆண்டு ஆண்டு இந்நிகழ்ச்சி தொடங்கப்பட்டது, இதுவரை ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக ஓடி முடிந்துவிட்ட நிலையில், தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனுக்கான பணிகள் ஆயத்தமாகி வருகின்றன.

மேலும் படிக்க | சன்னி லியோனின் சவாலை ஏற்ற ஸ்ருதிஹாசன்...வைரலாகும் வீடியோ!

இந்த சீசனில் யாரெல்லாம் பங்குபெற போகிறார்கள், என்னென்ன சண்டை சச்சரவுகள் நடக்கப்போகிறது, யார் யாருக்கும் காதல் மலர போகிறது என்பதையெல்லாம் காண மக்கள் ஆர்வமாக காத்துகொண்டு இருக்கின்றனர்.  இந்நிலையில் 6-வது சீசனில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களின் சிலர் குறித்து உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி இருக்கிறது.  விஜய் டிவியின் செல்ல பிள்ளையான டிடி இந்த சீசனில் கலந்துகொள்வார் என்று பேச்சு அடிபடுகிறது, இவர் கலந்துகொண்டால் பிரியங்கா இருந்ததை போல நிகழ்ச்சி கலகலப்பாக இருக்கக்கூடும்.  அடுத்ததாக பின்ணணி பாடகி ராஜலட்சுமி மற்றும் தொகுப்பாளர் ரக்ஷன் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இந்த தகவல்கள் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, இந்த மூன்று முகமும் விஜய் டிவியின் பிரபலமான முகம் என்பதால் இவர்கள் யாரேனும் கலந்துகொள்ள வாய்ப்பு உண்டு என்று யூகிக்கப்படுகிறது.  நடந்து முடிந்த ஐந்தாவது சீசன் இதுவரை கண்டிடாத வகையில் சிறந்த பொழுதுபோக்காக  அமைந்திருந்தது, அதேபோல இந்த சீஸனும் அமையவேண்டும் என்று பலரும் விரும்புகின்றனர்.  மேலும் முதல் ஐந்து சீசன்களையும் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் தான் இந்த சீசனையும் தொகுத்து வழங்குவாரா இல்லையா என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மேலும் படிக்க | புஷ்பா-2 படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத்தால் வந்த ஆபத்து!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News