ayali Reaction: "முட்டாள்கல பாத்து ஏன் பயப்படனும்" வாள் வீசும் அயலி: கொண்டாடும் திரையுலகம்

ஜீ5 ஓடிடி பிளாட்பார்மில் வெளியாகியிருக்கும் அயலி சமூக கருத்துகளை தீரமுடன் பேசியிருப்பதால், திரைத்துறையினரும், ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். 

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 27, 2023, 01:21 PM IST
ayali Reaction: "முட்டாள்கல பாத்து ஏன் பயப்படனும்" வாள் வீசும் அயலி: கொண்டாடும் திரையுலகம் title=

ZEE5 தமிழ் ஓடிடி பிளாட்ஃபார்மில் அயலி வெப் சீரீஸ் வெளியாகியிருக்கிறது. இயக்குநர் முத்துக்குமார் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் அந்த வெப்சீரீஸ் பெண் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதுடன், சமூகத்தில் புரையோடியிருக்கும் மூட நம்பிக்கைகளையும் பட்டவர்த்தனமாக தோலுரித்துக் காட்டியுள்ளது. ஒரு சிறுமியின் நடிப்பில் சமூக அவலங்களை தோலுரித்துக் காட்டியிருக்கும் அயலி-ஐ தற்போது சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.  

மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும், 8 ஆம் வகுப்பு படிக்கும் தமிழ் செல்வி என்ற இளம் பெண்ணைப் பற்றிய கதை தான் அயலி. அதோடு, வீரப்பண்ணை கிராமத்தில் தற்போதுள்ள பழக்கவழக்கங்கள், பருவமடைந்தவுடன் பெண்களை திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற  நடைமுறைகளை பற்றி இந்த கதை பேசுகிறது. இந்த பாரம்பரியத்தை கடைபிடிக்காவிட்டால், அயலி தேவி கோபமடைந்து கிராம மக்களை சபிப்பாள் என்பது இந்த கிராமத்து மக்களின் நம்பிக்கை. பழங்கால நம்பிக்கைகள் மற்றும் பழக்கவழக்கங்களை உடைத்து, இளம் பெண் மருத்துவராக வேண்டும் என்ற தனது இலக்கை அடைய அனைத்து முரண்பாடுகளுக்கு எதிராகவும் போராடுகிறாள். 

மேலும் படிக்க | Pathan box office collection: ஷாருக்கானின் 'பதான்' முதல் நாள் வசூல் எவ்வளவு?

 

இருப்பினும், வீரப்பண்ணை கிராமத்தில் உள்ள மற்ற சிறுமிகளுக்கு வழி காட்டக்கூடிய மாற்றத்தை கொண்டு வருவதில் அவள் வெற்றி பெறுவாளா? என்பது தான் எஞ்சிய கதை. நடிகர் துல்கர் சல்மான் அயலி டிரெய்லரை வெளியிட்டு, வெப்சீரீஸூக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

கதையை சிறப்பாக தயாரித்திருக்கும் தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினருக்கு இயக்குநர் வெங்கட் பிரபு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் எழுதியிருக்கும் விமர்சனத்தில் கதையின் தாக்கம் மிகச்சிறப்பு எனக் கூறியுள்ளனர். எழுத்து, கதை வடிவமைப்பு, அதனை காட்சிப்படுத்தியிருக்கும் விதம் எல்லாம் பிரம்மாதம் என கூறியிருக்கின்றனர். 

இன்னொரு டிவிட்டர் யூசர் ஒருவர், தவறாமல் அனைவரும் அயலியை பார்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். பெண் கல்வி மற்றும் சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் வெப் சீரிஸ் என்பதால், அனைத்து தரப்பு மக்களிடமும் இந்த வெப்சீரீஸை கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுளார்.

மேலும் படிக்க | அனுஷ்கா ஷெட்டி வேணுமா? 50 லட்சம்... மேனேஜர் செய்த மோசடி அம்பலம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News