அனுஷ்கா ஷர்மா (Anushka Sharma) மற்றும் விராட் கோலி (Virat Kohli) தங்கள் முதல் குழந்தை பிறந்த சில மாதங்களில் தங்கள் தொழிலுக்கு திரும்பத் தயாராகிவிட்டனர். விருஷ்கா என்று அழைக்கப்படும் இந்த பிரபல ஜோடியின் மகள் வாமிகா (Vamika) 2021 ஜனவரி 11 அன்று பிறந்தார்.
இந்திய கேப்டன் விராட் கோலி மகளை வரவேற்பதற்காக தந்தைக்கு கொடுக்கப்படும் பேறுகால விடுப்பை எடுத்த பின்னர் கிரிக்கெட் களத்திற்கு திரும்பிவிட்டார். இந்த நிலையில், மே மாதத்தில் தனது நடிப்புத் தொழிலுக்கு திரும்புவதாக கூறியிருந்த அனுஷ்கா ஷர்மா, கடந்த வாரத்தில் அதை தெரிவித்திருந்தார். இன்று, அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராமில் (Instagram) ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார், இது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்துவது உறுதி.
மனம் திறந்து சிரிக்கும் தனது புகைப்படத்தை சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள அனுஷ்கா "Is happy Monday an oxymoron?" என்று எழுதியுள்ளார். புகைப்படத்தில் பச்சை நிற டாப், அடர் நீல நிற பேன்ட் மற்றும் பிரகாசமான மஞ்சள் காலணிகளை அணிந்திருந்தார் அனுஷ்கா.
Also Read | குரானின் வசனங்கள் சட்டத்தை மீறுகிறதா? உச்ச நீதிமன்ற தீர்ப்பு என்ன?
சில வாரங்களுக்கு முன்பு, அனுஷ்கா செட்டில் இருந்து மற்றொரு புகைப்படத்தை பகிர்ந்து கொண்டார், அதில் தலைமுடி மற்றும் அலங்காரம் செய்யப்படும்போது அனுஷ்கா ஒரு ஸ்கிரிப்டைப் படித்துக் கொண்டிருக்கிரார்.
இதற்கிடையில்,அனுஷ்கா தனது தயாரிப்பு நிறுவனமான க்ளீன் ஸ்லேட் பிலிம்ஸ் (Clean Slate Filmz) மூலம் நெட்ஃபிக்ஸ்க்காக 'Qala' என்ற திரைப்படத்தை தயாரிக்கவுள்ளார். 'Qala' படத்தை 'Bulbbul' திரைப்பட இயக்குனர் அன்விதா தத் இயக்கவுள்ளார்.
இந்த திரைப்படத்தில் நடிகை திரிப்தி டிம்ரி (Tripti Dimri) நடிக்கவுள்ளார். இது மறைந்த இர்பான் கானின் மகன் பாபில் கானின் முதல் படமாகவும் இருக்கும். படத்தின் முதல் ஷெட்யூல் சமீபத்தில் நிறைவடைந்தது.
Also Read | மியான்மர் போராட்டங்களில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் காரணம் என்ன?
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR