ஸ்கூலை கைப்பற்ற போவது யார்? அண்ணா சீரியல் இன்றைய அப்டேட்!

Anna Zee Tamil Serial: நேற்றைய எபிசோடில் ஷண்முகம் வைத்த உண்டியலில் ஊர் மக்கள் நகையையும் பணத்தையும் போட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.  

Written by - RK Spark | Last Updated : May 6, 2024, 02:17 PM IST
  • சண்முகத்தின் உண்டியலை தூக்க பிளான்.
  • ஸ்கூலை கைப்பற்ற போவது யார்?
  • அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்.
ஸ்கூலை கைப்பற்ற போவது யார்? அண்ணா சீரியல் இன்றைய அப்டேட்!  title=

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷண்முகம் வைத்த உண்டியலில் ஊர் மக்கள் நகையையும் பணத்தையும் போட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, சனியன் ஓடி வந்து சௌந்தரபாண்டியிடம் இந்த விஷயத்தை சொல்ல சத்தமாக சிரிக்கும் அவர் இந்த ஊர்ல அந்த ஸ்கூலை வாங்க தகுதியான ஆள் நான் ஒருத்தன் மட்டும் தான் என்று சிரிக்க இசக்கி ரொம்ப சிரிக்காதீங்க எங்க அண்ணன் எப்படியும் உங்களை அந்த இடத்தை வாங்க விடாது என்று சவால் விடுகிறாள். 

மேலும் படிக்க | தமிழில் அறிமுகமாகி உள்ள புதிய ஓடிடி தளம்! மாதம் ரூ.29 கட்டினால் போதும்!

பாக்கியம் எல்லாரும் காசு போட்டார்களா என்று சனியனிடம் கேட்க அவன் ஆமாம் என்று சொல்ல உங்க புள்ள குட்டியும் அந்த ஸ்கூலில் தான் படிக்குது, அதை இடிச்சிட்டா உங்க பிள்ளைகளோட வாழ்க்கையை நினைத்து பாருங்க என்று அறிவுரை சொல்கிறாள். மறுபக்கம் வீட்டில் ஷண்முகம் உண்டியலுக்கு பூஜை போட்டு கொண்டிருக்க வைகுண்டம் அதை சாய்த்து பார்த்து பணம் கம்மியா தான் இருக்கும் போல், இப்பவும் சொல்றேன் அந்த ஸ்கூல் வாங்குறதை கை விட்டுடலாம், இல்லனா நம்ம தான் அவமானப்பட்டு நிற்கணும் என்று சொல்ல ஷண்முகம் வைகுண்டத்தை அடிக்க துரத்த அவர் ரூமுக்குள் ஓடி ஒளிகிறார். 

anna

அடுத்து சௌந்தரபாண்டி முத்துபாண்டியிடம் நாளைக்கு நீ வேலைக்கு போகாதே, ஸ்கூலை வாங்க நீ கையெழுத்து போடணும் என்று சொல்கிறார். சிவபாலன் நானும் போடணுமா என்று கேட்க சௌந்தரபாண்டி நீ ஒன்னும் கிழிக்க வேண்டாம் என்று திட்டி விடுகிறார். முத்துபாண்டியை தனியாக அழைத்து சென்று ஷண்முகம் வீட்டில் இருக்கும் உண்டியலை தூக்கிடலாமா என்று கேட்க அதற்கெல்லாம் அவசியமில்லை, அவ்வளவு பணம் சேர்ந்து இருக்காது என்று சொல்ல சௌந்தரபாண்டி அந்த உண்டியலை தூக்கிடலாம் என்று உறுதியாக சொல்லி ஒரு ஐடியாவும் போடுகிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | இளையராஜா குறித்த கேள்வி - வைரமுத்து கொடுத்த ரியாக்சன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News