விஜய் நடிப்பில் உருவாகும் தளபதி64 திரைப்படத்தில் ஆண்ட்ரியா...?

பிகில் படத்தை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘தளபதி 64’. இத்திரைப்படத்தில் ஆண்ட்ரியா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

Last Updated : Oct 29, 2019, 02:45 PM IST
விஜய் நடிப்பில் உருவாகும் தளபதி64 திரைப்படத்தில் ஆண்ட்ரியா...? title=

பிகில் படத்தை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘தளபதி 64’. இத்திரைப்படத்தில் ஆண்ட்ரியா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு கடந்த 25-ஆம் தேதி வெளியாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் இது வரை நூறு கோடிகளைத் தாண்டி வசூல் சாதனை படைத்து வருகிறது. இந்த படத்தின் கதை பெண்களை மையப்படுத்தி மற்றும் விஜய் ரசிகர்களுக்காக எடுக்கப்பட்டது என்ற விமர்சனங்கள் இருந்தபோதும் கூட இந்த வசூலை வைத்து பார்க்கும்போது தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி என்று கூறலாம்.

அதே வேளையில் விஜய்யின் அடுத்த படமான தளபதி 64-க்கான வேலைகள் தொடங்கி மும்மரமாக நடைப்பெற்று வருகிறது. முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்ட நிலையில், இந்த படத்தில் இணைந்துள்ள புதிய நடிகை குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கின்றார்., மாளவிகா மோகனன், சாந்தனு என முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து உள்ளனர். தற்போது இவர்களுடன் சேர்ந்து நடிகை ஆண்ட்ரியா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப் உள்ளதாக தகவல்கள் வெளியாகயுள்ளது.

இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு டெல்லியில் தொடங்கி 20 நாட்கள் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

Trending News