’புஷ்பா’ நாயகனை இயக்கும் பிரபல தமிழ் இயக்குநர் - அறிவிப்பு விரைவில்

புஷ்பா 2 படத்தில் விறுவிறுப்பாக நடித்து வரும் அல்லு அர்ஜூன் அடுத்தாக பிரபல தமிழ் இயக்குநருடன் இணைய உள்ளதாக டோலிவுட் வட்டாரத்தில் செய்திகள் பறக்கின்றன.

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 17, 2022, 08:31 AM IST
  • டோலிவுட்டில் களமிறங்கும் லோகேஷ் கனகராஜ்
  • கதையை ஒகே செய்த புஷ்பா நாயகன் அல்லு அர்ஜூன்
  • தளபதி 67 படத்திற்கு பிறகு இருவரும் கூட்டணி அமைக்க வாய்ப்பு
’புஷ்பா’ நாயகனை இயக்கும் பிரபல தமிழ் இயக்குநர் - அறிவிப்பு விரைவில் title=

அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் பாக்ஸ் ஆஃபீஸில் கலெக்ஷனை வாரிக்குவித்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என ரிலீஸ் செய்யப்பட்ட இடங்களில் எல்லாம் வசூல் மழை தான்.செம்மரக் கடத்தலை மையமாக வைத்து எடுத்த இந்தப் படத்தில், சாதாரண கூலியாக செம்மரக் கடத்தலுக்கு சென்று, பெரிய சாம்ராஜ்ஜியத்தை ஹீரோ எப்படி உருவாக்குகிறார்? என்பது படத்தின் கதை. விறுவிறுப்பாக செல்லும் கதைக்களம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 

இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜூன் நடித்து வருகிறார். இதற்கு அடுத்ததாக பிரபல தமிழ் இயக்குநரின் படத்தில் அவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தான் என டோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. மாநகரம், கைதி, மாஸ்டர் மற்றும் விகரம் என அடுத்தடுத்து பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட் கொடுத்து கோலிவுட்டில் ஸ்டார் இயக்குநராக உயர்ந்திருக்கும் அவருக்கு, மார்க்கெட்டில் மவுசு அதிகம் உருவாகியுள்ளது. விக்ரம் படத்தை முடித்திருக்கும் அவர், அடுத்ததாக இளைய தளபதி விஜய்யுடன் மீண்டும் கூட்டணி அமைக்க உள்ளார். 

தளபதி 67 படத்தை அவர் இயக்க இருக்கிறாராம். அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்துக்குப் பிறகு தெலுங்கில் கால்பதிக்க முடிவெடுத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் மற்றும் பிரபாஸ் உள்ளிட்டோரிடம் ஏற்கனவே சந்தித்து கதை கூறியிருக்கிறார். இவர்களில் புஷ்பா நாயகன் அல்லு அர்ஜூன் ஒரு கதைக்கு ஒகே செய்திருக்கிறாராம். காலமும் நேரமும் கூடி வரும்பட்சத்தில் இருவரும் இணைந்து பணியாற்ற வாய்ப்புகள் அதிகமாம். கோலிவுட்டை தொடர்ந்து டோலிவுட்டில் கால்பதிக்க லோகேஷ் கனகராஜ் ஆர்வம் காட்டுவது ஏன்? என்றும் ரசிகர்கள் கிசுகிசுக்கிறார்கள்.   

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News