சூரரைப் போற்று ஹிந்தி ரீமேக்கில் இவரா; உறுதியான தகவல்

சூர்யா நடித்த சூரரைப் போற்று படம் ஹிந்தியில் ரீமேக் ஆக உள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 30, 2022, 10:39 AM IST
சூரரைப் போற்று ஹிந்தி ரீமேக்கில் இவரா; உறுதியான தகவல் title=

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான 'சூரரை போற்று' மெகா வெற்றி பெற்ற திரைப்படம் ஆகும். சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் என்ற நிறுவனத்துடன் இணைந்து அபூன்டான்டியா என்டர்டெய்ன்மென்ட் என்ற நிறுவனம் ஹிந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டு, கடந்த ஜூலை மாதம் அதற்கான அறிவிப்பை வெளியிட்டது. 

சூரரை போற்று (Soorarai Pottru) சாதாரண மக்களையும் விமானத்தில் பயணிக்க முயற்சி செய்யும் கதை ஆகும். இதில் லட்சிய இளைஞனின் கதாபாத்திரத்தில் கலக்கினார் சூர்யா (Actor Suriya). பல்வேறு தடைகளையும் தாண்டி, குடும்பம், நண்பர்கள் மற்றும் விடாமுயற்சியால் தன்னுடைய லட்சியத்தை அடைகிறார் மாறா.

ALSO READ | Soorarai Pottru: சர்வதேச விருதுடன் சூர்யா - ஜோதிகா: வீடியோ வைரல்

ஏர் டெக்கான் விமான நிறுவனர் கேப்டன் ஜி.ஆர் கோபிநாத்தின் (Air Deccan founder Capt. G.R. Gopinath) வாழ்க்கையில் நடைபெற்ற சில நிகழ்வுகளை அடிப்படையாக கொண்ட திரைப்படம் இது.

"சூரரைப் போற்று’ திரைப்படத்தை இயக்கிய சுதா கொங்கரா (Sudha Kongara), ஹிந்தி மொழியிலும் இயக்குநராக பணிபுரிவார். 

இந்த நிலையில் தற்போது சூர்யா நடித்த சூரரைப் போற்று படம் ஹிந்தியில் ரீமேக் ஆக உள்ளது. அந்த ரீமேக்கில் சூர்யா நடிப்பில் அக்ஷய் குமார் நடிக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது. அவர் நடித்தாலும் நன்றாக தான் இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

ALSO READ | 2021-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்கள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News