அடுத்ததற்கு துணிவுடன் ரெடியான அஜித் - வைரலாகும் வீடியோ

நடிகர் அஜித் விமான நிலையத்தில் இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.  

Written by - க. விக்ரம் | Last Updated : Sep 24, 2022, 04:19 PM IST
  • ஹெச் வினோத் - அஜித் படத்துக்கு துணிவு என்று பெயர்
  • படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது
  • படம் உண்மை சம்பவத்தின் தழுவலாக உருவாகிறதென தகவல்
அடுத்ததற்கு துணிவுடன் ரெடியான அஜித் - வைரலாகும் வீடியோ title=

வலிமை படத்துக்கு பிறகு மீண்டும் வினோத்துடன் இணைந்திருக்கிறார் அஜித். சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்கள் மூலம் தன்னை வினோத் நிரூபித்தவர் என்பதால் வலிமை மீது ரசிகர்களுக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் எதிர்பார்த்தபடி படம் ஒர்க் அவுட் ஆகவில்லை. வலிமை இப்படி வலுவற்று போனதற்கு ஏகப்பட்ட பேரின் தலையீடுதான் காரணம் என தகவல் பரவியது.

இந்தச் சூழலில் வினோத்துடன் மீண்டும் இணைந்திருக்கும் படம் க்ரைமை அடிப்படையாக வைத்து உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது. க்ரைம் சப்ஜெக்ட்டிலும் அதற்கான டீட்டெயிலிங்கிலும் வினோத் அட்டகாசம் செய்பவர் என்பதால் இந்தப் படம் நிச்சய்ம் பந்தயம் வெல்லும் என்கின்றனர் அஜித்தின் ரசிகர்கள். இப்படிப்பட்ட நிலையில் படத்தின் பெயர் குறித்து எந்தத் அப்டேட்டும் இல்லாமல் இருந்தது.

Ajith

கடந்த 21ஆம் தேதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும், பெயரும் வெளியிடப்பட்டது. அதன்படி படத்துக்கு ‘துணிவு’ என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தில் அஜித் நெகட்டிவ் ரோலில் நடிக்கிறார். அதனை உறுதிப்படுத்தும்விதமாகத்தான் ஃபர்ஸ்ட் லுக்கும் இருந்தது. 

இதற்கிடையே படம் வங்கிக்கொள்ளையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் அந்த வங்கிக்கொள்ளை உண்மை சம்பவம் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் 1987ஆம் ஆண்டு துப்பாக்கிகளுடன் 15 பேர் காவல் துறையினர்  கெட்டப்பில் வங்கியைக் கொள்ளையடித்தனர். அப்போது  4.5 மில்லியன் டாலர்களுடன் அவர்கள் தப்பினார்கள். இது இந்திய வரலாற்றில் மிகப்பெரிய வங்கிக் கொள்ளை என கருதப்படுகிறது.

Thunivu

இந்த சம்பவத்தை தழுவிதான் `துணிவு' எடுக்கபட்டிருப்பதாகவும், வங்கி கொள்ளையர்கள் பாங்காக்கிற்கு தப்பி செல்வது போலவும் அவர்களை அங்கு சென்று அஜித் பிடிப்பதாகவும் கதை அமைக்கப்பட்டிருப்பதாகவும் கோலிவுட்டில் பேச்சு எழுந்திருக்கிறது.

மேலும் படிக்க | நான் ஒன்றும் குழந்தை இல்லை - நயன்தாராவின் அசத்தல் பேச்சு; வைரலாகும் ப்ரோமோ

இந்நிலையில், நடிகர் அஜித் விமான நிலையத்தில் இருக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது. அதன்படி, அஜித் இன்று அதிகாலை சென்னை விமான நிலையத்தில் இருந்து பாங்காக் செல்லும் விமானத்தில் புறப்பட்டு சென்றுள்ளார். இவர் பாங்காகில் நடைபெறும் "துணிவு" படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்கு சென்றதாக தெரிகிறது. மேலும், இவருடன் நடிகை மஞ்சுவாரியர் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் துணிவு படத்தில் மஞ்சு வாரியர் நடித்திருப்பது உறுதியாகியுள்ளது.

மேலும் படிக்க | என்னை வழிநடத்தும் குருசாமி ஜெயராம் - ஜெயம் ரவி நெகிழ்ச்சி ட்வீட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News