டி.இமானுடன் புதிய படத்தில் கைக்கோர்த்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

Dwarka Productions தயாரிப்பில், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் காமெடி திரில்லர் பூஜையுடன் துவங்கியது.   

Written by - Yuvashree | Last Updated : Nov 3, 2023, 10:51 AM IST
  • தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர், ஐஸ்வர்யா ராஜேஷ்.
  • இவர், புதிதாக கிரைம் த்ரில்லர் பாணியில் உருவாக உள்ளது.
  • இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.
டி.இமானுடன் புதிய படத்தில் கைக்கோர்த்த ஐஸ்வர்யா ராஜேஷ்! title=

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது புதிதாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கியது. 

ஐஸ்வர்யா ராஜேஷ்:

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்து பிரபலமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அட்டகத்தி படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர், “காக்கமுட்டை” படத்திற்கு பிறகு அப்படம் மூலமாகவே பலரால் அறியப்பட்டார். அதன் பிறகு அவர் நடித்த கனா, நம்ம வீட்டு பிள்ளை, வானம் கொட்டட்டும் உள்ளிட்ட படங்கள் ஹிட் அடித்தன. சமீபத்தில் வெளியான இவரது ஃபர்ஹானா படமும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. தற்போது அவர் ஒரு காமெடி திரில்லர் படத்தில் நடிக்க உள்ளார். 

காமெடி த்ரில்லர்:

Dwarka Productions தயாரிப்பில், பிளேஸ் கண்ணன் - ஶ்ரீலதா பிளேஸ் கண்ணன் வழங்கும், அறிமுக இயக்குநர்  ரா.சவரி முத்து இயக்கத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு மற்றும் ரெடின் கிங்ஸ்லி நடிப்பில் கலக்கலான காமெடி படமாக உருவாகும் புதிய திரைப்படம், பூஜையுடன் துவங்கியது. 

இப்படத்தின் பூஜை,  திரையுலக பிரபலங்களுடன் படக்குழுவினர் கலந்துகொள்ள இனிதே நடைபெற்றது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இதன் பூஜை விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டார். 

மேலும் படிக்க | சினிமாவிற்குள் ரீ-எண்ட்ரி கொடுக்கும் ரம்பா! எந்த படத்தில் நடிக்கிறார் தெரியுமா?

டார்லிங்க், இரும்புத்திரை, அண்ணாத்தே, ஹீரோ, மற்றும் மார்க் ஆண்டனி படங்களில், திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றிய  ரா.சவரி முத்து இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். 

ஒரு மருத்துவமனையில் நர்ஸாக வேலை பார்க்கும் ஒரு பெண்ணின் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் கலகலப்பான காமெடியுடன், பரபரப்பான திரைக்கதையாக அமைக்கப்பட்டுள்ளது. இப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் ரசித்துச் சிரிக்கும் ஒரு அருமையான படைப்பாக இருக்கும். 

இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள் இவர்களுடன் சுனில் ரெட்டி, சந்தான பாரதி, அர்ஜுன் சிதம்பரம், பக்ஸ், சேஷு, மாறன், ஆதித்யா கதிர், கராத்தே கார்த்தி ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள்.

மேலும் படிக்க | தலைவர் 171 படத்திற்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News