நேஷனல் க்ரஷ் ராஷ்மிகா மந்தனா மற்றும் திறமைமிகு நடிகர் தீக்ஷித் ஷெட்டி ஆகியோர் இணைந்து நடிக்கும் திரைப்படம் "தி கேர்ள்பிரண்ட்". பிரபல தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் வழங்கும் இப்படத்தை, கீதா ஆர்ட்ஸ், மாஸ் மூவி மேக்கர்ஸ் மற்றும் தீரஜ் மொகிலினேனி என்டர்டெயின்மெண்ட் பேனர்கள் இணைந்து தயாரிக்கிறது. ராகுல் ரவீந்திரன் இயக்கியுள்ள "தி கேர்ள்பிரண்ட்" படம் ஒரு அழகான காதல் கதையைச் சொல்கிறது. இப்படத்தை தீரஜ் மொகிலினேனி மற்றும் வித்யா கோப்பினிடி ஆகியோர் தயாரித்துள்ளனர். நேற்று , பிரபல முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டா "தி கேர்ள்பிரண்ட்" படத்தின் டீசரை வெளியிட்டார்.
மேலும் படிக்க | Suriya 45: சூர்யாவின் 45வது படத்தை இயக்கும் RJ பாலாஜி யார் தெரியுமா?
படம் குறித்து விஜய் தேவரகொண்டா கூறியதாவது, "தி கேர்ள்பிரண்ட்" டீசரில் உள்ள ஒவ்வொரு காட்சியும் வெகு சுவாரஸ்யமாக உள்ளது. இந்தப் படத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். 8 ஆண்டுகளுக்கு முன்பு படப்பிடிப்பு தளத்தில் ராஷ்மிகாவை சந்தித்தேன். பல பெரிய வெற்றிகளைப் பெற்றாலும், இன்னும் அவர் மிகவும் அடக்கமாகவே இருக்கிறார். "தி கேர்ள்பிரண்ட்" படம், ஒரு நடிகையாக அவருக்கு அதிக பொறுப்பை அளித்துள்ளது, அந்த பொறுப்பை அவர் முறையாக ஏற்றுக்கொண்டு, தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். ரசிகர்களின் இதயங்களைக் கவரும் "தி கேர்ள்பிரண்ட்" படத்தின் ஒட்டுமொத்த குழுவிற்கும் எனது வாழ்த்துகள்," என்று அவர் கூறியுள்ளார்.
Launching #TheGirlfriendteaser to the world :)https://t.co/45kCAMAJqV
I love every visual of this teaser.
I am so excited to see this drama unfold.She has been a lucky charm for so many of us actors, being part of our biggest successes. Growing fiercely as an actor, a…
— Vijay Deverakonda (@TheDeverakonda) December 9, 2024
"தி கேர்ள்பிரண்ட்" டீஸர் ராஷ்மிகா கல்லூரி விடுதிக்குள் நுழைவதிலிருந்து தொடங்குகிறது. டீசர் ஹீரோ தீக்ஷித் ஷெட்டி மற்றும் ராஷ்மிகாவின் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துகிறது, அவர்களுக்கு இடையேயான அழகான உறவைக் காட்டுகிறது. கல்லூரியில் படிக்கும் காலத்தில் முன்னணி ஜோடியின் உணர்வுபூர்வமான பயணம் இதயப்பூர்வமான தருணங்களுடன் அவர்களின் உறவைச் சித்தரிக்கிறது. கவித்துவமான உரையாடல்களுடன் விஜய் தேவரகொண்டாவின் குரல்வளம் நம்மை கவர்கிறது. ஹேஷாம் அப்துல் வஹாப்பின் பின்னணி இசையும், டீசரின் முடிவில் ராஷ்மிகாவின் உரையாடலும் அனைவரையும் கவர்வதாக அமைந்துள்ளது. வித்தியாசமான காதல் கதையாக உருவாகி வரும் "தி கேர்ள்பிரண்ட்" விரைவில் திரைக்கு வர உள்ளது.
நடிகர்கள்: ராஷ்மிகா மந்தனா, தீக்ஷித் ஷெட்டி
தொழில்நுட்ப குழு:
- ஒளிப்பதிவு: கிருஷ்ணன் வசந்த்
- இசை: ஹேஷாம் அப்துல் வஹாப்
- ஆடைகள்: ஷ்ரவ்யா வர்மா
- தயாரிப்பு வடிவமைப்பு: எஸ். ராமகிருஷ்ணா, மௌனிகா நிகோத்ரி
- மக்கள் தொடர்பு : யுவராஜ்
- மார்கெட்டிங் : முதல் காட்சி
- வழங்குபவர் : அல்லு அரவிந்த்
- தயாரிப்பு பேனர்கள் : கீதா ஆர்ட்ஸ், மாஸ் மூவி மேக்கர்ஸ், தீரஜ் மொகிலினேனி என்டர்டெயின்மென்ட்
- தயாரிப்பாளர்கள்: தீரஜ் மொகிலினேனி, வித்யா கோப்பினிடி
- எழுத்து & இயக்கம் : ராகுல் ரவீந்திரன்
மேலும் படிக்க | சூர்யா 45 படத்தின் நாயகி யார்? சூர்யாவுடன் ஏற்கனவே ஜோடி போட்டவர்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ