யுவன் இயக்கத்தில் யோகிபாபு, ரமேஷ் திலக், சன்னிலியோன், தர்ஷா குப்தா, ஜி.பி.முத்து, சதீஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் ஓ மை கோஸ்ட். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சில நாள்களுக்கு முன்பு சென்னையில் நடந்தது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சதீஷ், “மும்பையிலிருந்து சன்னிலியோன் வந்திருக்கிறார்.அவர் எப்படி ட்ரெஸ் பண்ணியிருக்காங்கனு பார்த்தீங்க. நம்ம பாரம்பரியம்படி பண்ணியிருக்காங்க. கோயம்புத்தூரிலிருந்து ஒரு பெண் வந்திருக்குது தர்ஷா குப்தா. அவங்க எப்படி ட்ரெஸ் பண்ணியிருக்காங்கனு பாருங்க” என்றார். அவரது இந்த பிற்போக்குத்தனமான பேச்சு கடும் கண்டனங்களை எழுப்பியிருக்கிறது.
குறிப்பாக இயக்குநர் நவீன் தனது ட்விட்டர் பக்கத்தில், “சன்னிலியோன் திரையில் ஆடையின்றி தோன்றுவதும், கோயமுத்தூர் பெண் மேடையில் என்ன ஆடை அணிய வேண்டும் என்பதும் அந்த பெண்களின் தனிப்பட்ட உரிமை. சதீஷ் சகோ, உங்கள் மனைவி என்ன ஆடை அணிய வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்தாலே அது தவறுதான்” என குறிப்பிட்டிருந்தார்.
சன்னிலியோன் திரையில் ஆடையின்றி தோன்றுவதும், கோயமுத்தூர் பெண் மேடையில் என்ன ஆடை அணிய வேண்டும் என்பதும் அந்த பெண்களின் தனிப்பட்ட உரிமை. @actorsathish சகோ, உங்கள் மனைவி என்ன ஆடை அணிய வேண்டும் என்பதை நிங்கள் முடிவு செய்தாலே அது தவறுதான்.#மாற்றமேகலாச்சாரம்
pic.twitter.com/FFozk9FHBq— DirectorNaveen (@NaveenFilmmaker) November 10, 2022
இதனையடுத்து இந்த விவகாரத்துக்கு விளக்கமளித்த சதீஷ், “தர்ஷா அப்படி சொல்ல சொன்னதால்தான் நான் மேடையில் அப்படி பேசினேன்” என்று நீண்ட விளக்கமளித்தார்.
இந்நிலையில் விளக்கமளித்து வீடியோ வெளியிட்டிருக்கும் சதீஷுக்கு தர்ஷா கொடுத்திருக்கும் பதிலில், “சதீஷ் நான் மேடையில் அப்படியா உங்களை சொல்ல சொன்னேன். இது வேடிக்கையாக இருக்கிறது. யாராவது மேடையில் என்னை பற்றி அசிங்கமாக பேசுங்கள் என்று அவர்களே சொல்வார்களா?. எனக்கு அன்று அவ்வளவு வலித்தது. ஆனால் அதை நான் பெரிதாக காட்டிக்கொள்ளவில்லை. இப்போது நீங்கள் இப்படி சொல்வது நன்றாக இல்லை” என குறிப்பிட்டுள்ளார்.
Sathish is this good way to turn on me, that I asked u to tell like this in stage? It's very strange. Yaaravathu enna pathi, stage neenga asingama pesunganu solluvangala?? Enakum annaiku avlo hurt uh tha irunthuchu, but na atha perusa kaatikala. But ipo ipadi solrathu, not good.
— Dharsha (@DharshaGupta) November 10, 2022
விளக்க வீடியோவில் தர்ஷாதான் தன்னை அவ்வாறு பேச சொன்னதாக சதீஷ் கூறியிருந்த சூழலில் தற்போது, தான் அவ்வாறு சொல்லச்சொல்லவில்லை என தர்ஷா தெரிவித்திருப்பதன் மூலம் சதீஷ் அப்பட்டமாக பொய் சொல்லியிருக்கிறாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
This is horrendous.
If anyone needs to forgive him, it is her.
I dont think men who throw such jokes in public domains realize this is how women get shamed time and again and this is a license to heckle.
Horrible. https://t.co/7JLIRhutKW
— Chinmayi Sripaada (@Chinmayi) November 10, 2022
இந்த விவகாரம் குறித்து ட்வீட் செய்திருந்த சின்மயி, “இது பயங்கரமானது. யாராவது அவரை மன்னிக்க வேண்டும் என்றால், அது அவள்தான். பொது இடங்களில் இதுபோன்ற நகைச்சுவைகளை செய்யும் ஆண்கள், பெண்கள் அசிங்கப்படுத்தப்படுவதை உணர்வதே இல்லை. இது தொடர்ந்து நடந்தேவருகிறது” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | பிரபல நடிகரின் மனைவியை கட்டிப்போட்டு 250 சவரன் நகை கொள்ளை... வாட்ச்மேன் உடந்தையா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ