#VjChitra: கணவரின் கொடுமையால் தான் சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை நீதிமன்றத்தில் பரபரப்பு...

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில், காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவித்த கருத்துகள் வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 21, 2021, 01:10 AM IST
  • பிரபல சின்னத்திரை நடிகை சித்ராவுக்கும், ஹேமந்துக்கும் நிச்சயதார்த்தம் ஆகியிருந்தது
  • திருமணம் முடிந்துவிட்ட செய்தி, சித்ராவின் மரணத்திற்கு பிறகே வெளியிடப்பட்டது
  • பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து பிரபலமானவர் முல்லை என்னும் சித்ரா
#VjChitra: கணவரின் கொடுமையால் தான் சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை நீதிமன்றத்தில் பரபரப்பு...   title=

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில், காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவித்த கருத்துகள் வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

சித்ராவின் கணவர் கணவர் ஹேம்நாத் தாக்கல் செய்த ஜாமீன் மனு தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் காவல்துறை சார்பில் நீதிமன்றத்தில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

சித்ரா (Actress chitra) தற்கொலையில் தனக்கும், சித்ராவுக்கும் இடையில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை எனவும், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் சித்ராவும் கணவர் ஹேம்நாத் ஜாமீன் மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

Also Read | முல்லையாக மலர்ந்து ஹோட்டலில் வாடிய மலராய் உதிர்ந்த சித்ரா  

ஆனால், ஹேம்நாத்துக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து சித்ராவின் பெற்றோர் சார்பிலும், அவரது நண்பரான சையது ரோஹித் என்பவர் சார்பிலும் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

சித்ரா தற்கொலை செய்து கொண்ட உடனே, ஹேமந்த் தான் தனது மகளை கொலை செய்திருப்பதாக, சித்ராவின் தாய் செய்தியாளர்களிடம் கதறியபடியே சொன்னது நினைவிருக்கலாம்.

Also Read | #VjChitra: சித்ராவை கொன்றது கணவர் ஹேமந்த்... பரபரப்பை ஏற்படுத்திய அம்மா..

மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில்நசரத்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் (police) சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த விஷயங்கள் தான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சித்ராவின் நடத்தையில் ஹேம்நாத் சந்தேகம் கொண்டதாலேயே சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது பரவலாக ஹேமந்த் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு வலு சேர்ப்பதாக இருக்கிறது.

ஆனால், சித்ரா தற்கொலை செய்து கொண்டதற்கான காயமோ, தடமோ அவரின் கழுத்தில் இல்லை, எனவே மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் தரப்பில் வாதிடப்பட்டது.

Also Read | #VjChitra: பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையின் தற்கொலைக்கு காரணம் என்ன?

தற்கொலைதான் எனப் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபோதும், இந்த வழக்கு தற்போது மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதால், ஹேம்நாத்துக்கு ஜாமீன் வழங்குவது தொடர்பாக பதிலளிக்கக் கால அவகாசம் வழங்க வேண்டுமென காவல்துறை தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

அதாவது சித்ராவின் மரணம் தற்கொலையாக இருந்தாலும், கணவரின் கடுமையான அணுகுமுறையால் மனம் உடைந்து போய் தான் சின்னத்திரை சித்ரா தற்கொலை செய்துக் கொண்டார் என்ற கருத்தை உண்மையாக்குவதைப் போல் காவல்துறை ஆய்வாளரின் அறிக்கை அமைந்துள்ளதாக சித்ராவின் நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.

சித்ரா, தனது கணவர் ஹேமந்த்துடன் ஹோட்டலில் தங்கியிருந்தார். அதிகாலை 2.30 மணிக்கு சூட்டிங் (Serial shooting) முடிந்த பிறகு ஹோட்டலுக்கு திரும்பிய சித்ரா அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

Also Read | Rajinikanth-இன் அண்ணாத்தே படபிடிப்பு எப்போது தொடங்குகிறது தெரியுமா?   

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News