Vijay Instagram: 100 நிமிடங்களில் மில்லியன் பாலோயர்ஸ்... இன்ஸ்டாகிராமை ஆட்டம்காண வைத்த விஜய்

Actor Vijay Instagram: நடிகர் விஜய் இன்று புதிய இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கிய நிலையில், வெறும் 1 மணிநேரம் 40 நிமிடங்களில் அவர் 10 லட்சத்திற்கும் அதிகமான பாலோயர்ஸ்களை பெற்றுள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Apr 2, 2023, 06:01 PM IST
  • அவர் புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.
  • அதில், லைக்ஸ், கமெண்ட்கள் குவிந்து வருகின்றன.
  • நடிகர்களும் அவரின் புகைப்படத்திற்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.
Vijay Instagram: 100 நிமிடங்களில் மில்லியன் பாலோயர்ஸ்... இன்ஸ்டாகிராமை ஆட்டம்காண வைத்த விஜய் title=

Actor Vijay Instagram: தற்போது சமூக வலைதளங்கள் ஆதிக்கம் செலுத்தும் காலகட்டம். சினிமா முதல் குழந்தைக்கு காதுகுத்து வரை அனைத்து கொண்டாட்டங்களையும், நிகழ்ச்சிகளையும், சமூக வலைதளங்களில் புகைப்படங்களுடன், வீடியோக்களுடன், ரீல்ஸ்களுடன் பதிவு செய்வது என்பது தற்போதைய கலாச்சார செயல்பாடாகவே மாறிவிட்டது. 

வாட்ஸ்அப் ஸ்டேட்ஸ், பேஸ்புக் ஸ்டோரி, இன்ஸ்டா ஸ்டோரி, ஸ்நாப்சாட், ட்விட்டர் என இளைய தலைமுறை மட்டுமின்றி 70s கிட்ஸ் வரையிலும் சமூக வலைதளங்கள் ஆதிக்கம் செலுத்துகிறது. பிரபலங்களும் முன்பு போல செய்தியாளர் சந்திப்பு ஆகியவற்றை தவிர்தது தற்போது ட்வீட்களில் மட்டும் தங்கள் படம் சார்ந்த அறிவிப்பையும், பிற தகவல்களையும் வெளியிடுகின்றனர். உதாரணமாக, நடிகர் தனுஷ் தனது இணைமுறிவு அறிவிப்பை ட்விட்டரில்தான் பொதுவெளிக்கு பகிர்ந்துகொண்டார். எனவே, இந்த காலகட்டத்தில் சமூக வலைதளம் என்பது தவிர்க்க முடியாதது. 

மேலும் படிக்க | விஜய்யை பின்தொடரும் சிவகார்த்திகேயன்! இந்த விசயத்திலுமா?

அந்த வகையில், நடிகர் விஜய்யும் ட்விட்டர் மூலம் சமூக வலைதள செயல்பாட்டில் இருந்து வந்தார். இருப்பினும் நீண்ட நாளாக இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கவில்லை. ட்விட்டர் கருத்து தெரிவிக்கவும், தகவல் வெளியிடவும் ஏதுவாக இருந்தாலும், இன்ஸ்டாகிராம் தான் புகைப்படம், வீடியோக்களுக்கு ஏற்ற தளமாகும். மேலும், இது கோடிக்கணக்கான இளைஞர்களிடையே எளிதாக சென்றடைய வழிவகுக்கும். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்திருந்தாலும், விஜய் மட்டும் அந்த வட்டத்திற்குள் வரவே இல்லை.

இன்ஸ்டாகிராமில் விஜய்

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vijay (@actorvijay)

இந்நிலையில், நடிகர் விஜய் இன்று மாலை 4 மணியளவில் தனது புதிய இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆரம்பித்துள்ளார். மேலும், பக்கத்தை ஆரம்பித்து, ஒரு புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். தற்போதைய லியோ, பெப்பர் அண்ட் சால்ட் லுக்கில் விஜய் இருக்கும் அந்த புகைப்படத்தில்,"ஹலோ நண்பாஸ் நண்பீஸ்" என சிக்னேச்சர் வார்த்தைகளை கேப்ஷனாக பதிவிட்டுள்ளர்.

குறிப்பாக, இன்ஸ்டாகிராம் ஐடி ஆரம்பித்து, வெறும் 100 நிமிடங்களில் 10 லட்சம் பாலோயர்ஸ்களை பெற்று அசத்தியுள்ளார். மேலும், தமிழ் பிரபலங்களில் இவ்வளவு விரைவகா 10 லட்சம் பேர் பாலோயர்ஸ்களை பெற்றவர் விஜய்யாக தான் இருப்பார் என கூறப்படுகிறது. மேலும், இன்றே அவர் 20 லட்சத்தையும் தாண்டுவார் என கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | காஷ்மீரில் ஏற்பட்ட நிலநடுக்கம்! விஜய்யின் லியோ படக்குழுவிற்கு என்ன ஆனது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News