தமிழ் சினிமாவில் ஏற்ற இறக்கங்களை அதிகம் பார்த்தவர்களில் ஒருவர் நடிகர் சிம்பு. நீண்ட நாள்களுக்கு பிறகு அவர் நடித்த ஈஸ்வரன் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லையென்றாலும் அதற்கு அடுத்து நடித்த மாநாடு படம் சிம்புவின் செகண்ட் இன்னிங்ஸுக்கு நல்ல ஓபனிங் கொடுத்தது. 100 கோடி ரூபாய் வசூல் செய்த அப்படத்துக்கு பிறகு சிம்பு மீண்டும் பிஸியாகியுள்ளார்.
அதன்படி, விண்ணைத் தாண்டி வருவாயா என்ற க்ளாசிக் படம் கொடுத்த கௌதம் மேனனுடன் மீண்டும் இணைந்த சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்தார். படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க வேல்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் நேற்று வெந்து தணிந்தது காடு படம் வெளியானது. அதிகாலையிலேயே ரசிகர்கள் படத்தை பார்க்க திரையரங்குகளில் குவிந்தனர். படத்தை பார்த்த சிம்பு ரசிகர்கள் மட்டுமின்றி பொதுவான ரசிகர்கள் மற்றும் நடிகர்கள் வெந்து தணிந்தது காடு படத்துக்கு வரவேற்பு கொடுத்துள்ளனர். ஜெயமோகனின் கதையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட கதையை கௌதம் மேனன் அட்டகாசமாக படமாக்கியிருப்பதாகவும், சிம்பு முத்து என்ற கதாபாத்திரத்தில் வாழ்ந்திருப்பதாகவும் கருத்து எழுந்திருக்கிறது.
A career best performance from STR,GVM, ARR The story plot by Jeyamohan was awesome. This is one of the Best Gangster movie in Whole cinema. Must watch. Experience it in Nearby theatres. #simbu #VTKREVIEW #VendhuThanindhathuKaadu #Varisu pic.twitter.com/09L9WIXAUX
— Shalini (@Smiley_Girl_07) September 15, 2022
இந்நிலையில் சிம்பு சமீபத்தில் அளித்த பேட்டியில், “நான் காட்டு பசியில் இருக்கிறேன். அதனால், திரைப்பட கதைகள் எல்லாம் மிகவும் கவனமாக தேர்வு செய்கிறேன். அதிக கதைகள் வருகிறது இருந்தாலும் என்னுடைய காட்டு பசிக்கு தீனி போடும் வகையில் வரும் கதைகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்" என்று பேசினார். அவரது இந்தப் பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
மேலும் படிக்க | விஜய்க்கு அபராதம் - தடையை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ