வாரிசு படத்தின் அப்டேட்டுகளை அள்ளி வீசிய சரத்குமார்

தளபதி விஜய் நடிக்கும் வாரிசு படத்தின் அப்டேட்டுகளை சரத்குமார் பேட்டி ஒன்றில் அள்ளி வீசியிருக்கிறார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 30, 2022, 07:11 PM IST
  • வாரிசு படத்தில் நடிக்கும் சரத்குமார்
  • படம் சூப்பராக உருவாகி வருகிறது
  • பல ருசிகர தகவல்களை பகிர்ந்திருக்கிறார்
வாரிசு படத்தின் அப்டேட்டுகளை அள்ளி வீசிய சரத்குமார் title=

பீஸ்ட் படத்திற்குப் பிறகு தளபதி விஜய், தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபல்லியுடன் கூட்டணி அமைத்திருக்கிறார். தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இந்தப் படத்திற்கு ‘வாரிசு’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ராஷ்மிகா மந்தனா, விஜய்க்கு கதாநாயகியாக நடிக்கிறார். நேரடி தெலுங்கிலும் படம் உருவாவதால், தெலுங்கில் உட்சத்தில் இருக்கும் கதாநாயகியை வைத்தால் சிறப்பாக இருகுகம் என்பதற்காக ராஷ்மிகாவை படக்குழு தேர்வு செய்தது. இதேபோல், சரத்குமார், பிரகாஷ் ராஜ் மற்றும் ஷியாம் உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

குடும்ப படமாக இருக்கும் என தகவல்கள் வெளியானது. அண்ணன் - தம்பி பாசத்தை முன்வைத்து ‘வாரிசு’ கதைக்களம் அமைக்கப்பட்டிருப்பதாகவும், சண்டைக்காட்சிகள் இல்லாமல் முழுக்க முழுக்க குடும்ப பின்னணியில் உருவாகும் படம் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால், வாரிசு படம் எப்படி உருவாகிக் கொண்டிருக்கிறது என்பதை, ஒரு பேட்டியில் தெளிவாக கூறிவிட்டார் நடிகர் சரத்குமார். வாரிசு படம் பற்றி அவரிடம் கேட்கும்போது, குடும்பம், ஆக்ஷன், சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த கலவையாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | துப்பாக்கி சுடும் போட்டியில் அசத்திய அஜித்: பதக்க விவரம் இதோ

இதுகுறித்து சரத்குமார் பேசும்போது, "இந்திய அளவில் அதிக பாப்புலாரிட்டி கொண்ட நடிகராக விஜய் இருக்கிறார். அவருடன் இணைந்து படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. வாரிசு படத்தைப் பொறுத்தவரையில் குடும்பம், காமெடி, சென்டிமென்ட் மற்றும் ஆக்ஷன் என அனைத்தும் கலந்த கலவையாக இருக்கும். பக்கா பேம்லி என்டர்டெயின்மென்ட். மனிதர்களிடையே இருக்கும் மதிப்புகளை உன்னதாக கூறும் படமாகவும் வாரிசு உருவாகிக்  கொண்டிருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | விஜய், அஜித் தவறவிட்ட வாய்ப்பு! பயன்படுத்தி கொண்ட சூர்யா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News