கோவை கோனியம்மன் கோவிலில் கவுண்டம்பாளையம் திரைப்பட குழுவினர் வழிபாடு மேற்கொண்டார். இந்த வழிபாட்டிற்கு பின்னர் நடிகர் ரஞ்சித் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய ரஞ்சித், கவுண்டம்பாளையம் ஜூலை 5 வெளியாகிறது. நாடக காதலை மையப்படுத்தி விழிப்புணர்வு படமாக எடுக்கப்பட்டுள்ளது. கோவை பகுதியை சுற்றி படம் எடுக்கப்பட்டுள்ளது. பெண்களின் கண்ணீரை மையப்படுத்தி படம் எடுக்கப்பட்டது. பணக்கார பிள்ளைகளை குறிவைத்து தாக்குதல் நடத்துவதும் நாடக காதல்தான். வரதட்சணை, கொலை, தற்கொலை போன்றவை நடைபெற்று வருகிறது. சுயமரியாதை திருமணம் என சொல்லி எவ்வளவு கொடுமை நெல்லையில் நடந்துள்ளது. சுயமரியாதை திருமணத்தை நிறுத்த வேண்டும். சமூக நீதி பேசினால் எனக்கு கடும் கோபம் வரும்.
மேலும் படிக்க | நடிகர் விஜய்யின் 10ஆம் வகுப்பு மார்க் என்ன தெரியுமா? படிக்கிற பையன் போல..
சுயமரியாதை , சமூக நீதி பேசுபவர்கள் முதலில் அவர்கள் பெற்றோர் இல்லாமல் திருமணம் நடக்க கூடாது. அப்படி சட்டம் கொண்டு வர வேண்டும். பெற்றவர்கள்தான் உயர்ந்த சாதி. பெற்றவர்களை பிரித்து கல்யாணம் நடத்தி வைப்பதற்கு, சேர்த்து வைக்க வேண்டியது தானே. நான் நாடக காதல் என்று சொல்லும் போது மட்டும் என்னை சாதி வெறியனாக பார்க்கிறார்கள். விவசாய தற்கொலை ஏன் அரசு நிவாரணம் கொடுக்கவில்லை...? கள்ளுகடையை திறக்க வேண்டும்.. கள்ளுகடையில் வருமானம் இல்லாத காரணத்தினால் இவர்கள் விரும்புவதில்லை.. மதுவை வைத்து தான் வளர்ச்சி.தமிழ்நாடு மதுவில் வரும் வருமானத்தில் தான் வளர்ச்சி அடைந்து வருகிறது.
200 திரையரங்குகளில் படம் வெளியாகிறது. A சான்றிதல் இடம்பெற்றால் ஆபாச காட்சிகள் இல்லை. மாட்டுக்கறி வசனம் குறித்த கேள்விக்கு, மாட்டை தெய்வமாக வழிபடுகின்றோம். அதனால் அதற்கு பொங்கல் வைக்கின்றோம். நாய், பன்றி, காக்கா இதற்கெல்லாம் பொங்கல் உள்ளதா? என் படத்தின் மீது கோபம் வந்தால் அவர்களும் நாடக காதலை ஆதரிப்பவர்கள். அரசியல் கட்சி ஆரம்பிக்க திட்டமில்லை, சேரவும் திட்டமில்லை. கள்ளச்சாராயம் விற்பவர்கள் சேர் பிடித்து சட்டமன்றத்தில் அமர்ந்துள்ளனர். கடன் வாங்கி நடத்தும் ஆட்சி நல்ல ஆட்சியா? நாளை தலைமுறை காப்பாற்ற அரசியல் மாற்றம் வேண்டும்.
தேர்தல் வந்த காரணத்தினால் அரசியல் கட்சியினர் போட்டி போட்டு பணம் கொடுக்கின்றனர்.
சாலை திரும்பும் இடங்களில் டாஸ்மாக் திறக்கப்பட்டுள்ளது. ஸ்லோ பாய்சன் அது. கள்ளச்சாராயம் ஒழிக்க முடியாது. பிளாஸ்டிக்கும் இவர்களால் ஒழிக்க முடியாது. கவுண்டம்பாளையம் படத்திற்கு நிறைய எதிர்ப்பு உள்ளது. அரசியல் மிகப்பெரிய வியாபாரம். இன்னும் அரசியல் கடைகள் உள்ளது.. புதிய கடைகளும் திறக்கப்படவுள்ளது. நல்ல அரசியல் கட்சி வர வேண்டும் ஆசை எனக்கும் உள்ளது என நடிகர் ரஞ்சித் பேசியுள்ளார்.
மேலும் படிக்க | Aranmanai 4 : பேய் படமா? காமெடி படமா? அரண்மனை 4 எப்படியிருக்கு? ட்விட்டர் விமர்சனம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ