புதிய படத்திற்காக தனது பெயரை மாற்றிய பிரபாஸ்? என்ன பெயர் தெரியுமா?

The Raja Saab First Look: மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் புதிய படத்திற்கு 'ராஜா சாப்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.   பர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பாளர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர்.  

Written by - RK Spark | Last Updated : Jan 15, 2024, 08:59 AM IST
  • பிரபாஸ் நடிக்கும் புதிய படம்.
  • ராஜா சாப் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
  • மாருதி இந்த படத்தை இயக்குகிறார்.
புதிய படத்திற்காக தனது பெயரை மாற்றிய பிரபாஸ்? என்ன பெயர் தெரியுமா? title=

நடிகர் பிரபாஸ் தனது அடுத்த புதிய தெலுங்கு படத்தில் இயக்குனர் மாருதியுடன் இணைந்துள்ளார்.  ஜனவரி 15 ஆம் தேதி இன்று மகா சங்கராந்தியை முன்னிட்டு, படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பாளர்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர். மேலும் படத்திற்கு ராஜா சாப் என்று பெயரிடப்பட்டுள்ளது மற்றும் போஸ்டரில் பிரபாஸ் லுங்கி மற்றும் சட்டை அணிந்தபடி ஜாலியாக பாகுபலிக்கு முந்தைய பிரபாஸை நினைவுபடுத்துகிறார்.  முதலில் ராஜா டீலக்ஸ் என்று அழைக்கப்பட்ட இத்திரைப்படம் தற்போது ராஜா சாப் என அதிகாரப்பூர்வமாக தலைப்பு வெளியாகி உள்ளது. மாருதி இயக்க உள்ள இந்த படத்தை, பீப்பிள் மீடியா ஃபேக்டரியின் கீழ் டிஜி விஸ்வ பிரசாத் தயாரிக்க உள்ளார். இப்படத்தில் பிரபாஸ், மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர் மற்றும் படத்திற்கு எஸ் தமன் இசையமைக்க உள்ளார். இப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

மேலும் படிக்க | மலையாள படத்திற்கு இசை அமைக்கும் அனிருத்! யார் படம் தெரியுமா?

பிரபாஸ் நடிப்பில் கடைசியாக டிசம்பர் 22 அன்று திரையரங்குகளில் வெளியான சலார் பார்ட் 1 போர்நிறுத்தம் படத்தில் நடித்து இருந்தார். பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான இந்த மாஸ் ஆக்‌ஷன் திரில்லர் படத்தில் பிரபாஸ், பிருத்விராஜ் சுகுமாரன் மற்றும் ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர்.  கேஜிஎப் படத்தை இயக்கிய இயக்குனர் என்பதால் இந்த படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது.  மேலும் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.700 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. சமீபத்தில் நடந்த படத்தின் சக்ஸஸ் மீட் நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்து கொண்டு இருந்தனர். 

இதைத் தொடர்ந்து பிரபாஸ் தற்போது 'கல்கி கி.பி. 2898' படத்தில் நடித்து வருகிறார்.  புராண அறிவியல் புனைகதையை மையமாக உருவாகும் இந்த திரைப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் படம் மே 9, 2024 அன்று வெளியாக உள்ளது. மேலும் இந்த படங்களை தவிர சந்தீப் ரெட்டி வாங்காவுடன் ஸ்பிரிட் மற்றும் இயக்குனர் பிரசாந்த் நீல் உடன் சலார் பார்ட் 2 ஆகிய படங்கள் பிரபாஸ் நடிப்பில் அடுத்தடுத்து உள்ளது.  

பெயரை மாற்றிய பிரபாஸ்?

மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள ‘ராஜா சாப்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகர் பிரபாஸ் பெயர் ‘Prabhass’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  பிரபாஸ் தனது பெயரில் ‘S’ என்ற கூடுதல் எழுத்தை சேர்த்துள்ளார். இருப்பினும், ராஜா சாப் அறிவிப்பின் போது சமூக வலை தளங்களில் அவரது பெயர் ‘Prabhas’ என்று தான் குறிப்பிடுகின்றனர். இது போஸ்டரில் ஏற்பட்டுள்ள பிழையா அல்லது உண்மையாகவே பெயரை மாற்றியுள்ளாரா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

மேலும் படிக்க | திடீரென மொட்டையடித்துக்கொண்ட பிரபல நடிகை! செம ஷாக்கில் ரசிகர்கள்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News