Dhanush Net worth: தலை சுற்ற வைக்கும் தனுஷின் சொத்து மதிப்பு! எத்தனை கோடி தெரியுமா?

Dhanush Net Worth Details 2024: பிரபல நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதை கேட்ட ரசிகர்கள் தலை கிறுகிறுத்து போயுள்ளனர். 

Written by - Yuvashree | Last Updated : Jan 10, 2024, 05:15 PM IST
  • நடிகர் தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்துள்ளார்.
  • இவர் சொந்தமாக சென்னையில் சொகுசு பங்களா வைத்துள்ளார்.
  • இவரது மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
Dhanush Net worth: தலை சுற்ற வைக்கும் தனுஷின் சொத்து மதிப்பு! எத்தனை கோடி தெரியுமா? title=

கேப்டன் மில்லர் (Captain Miller) படத்தில் ஹீரோவாக நடித்துள்ள தனுஷ், 2002ஆம் ஆண்டு ‘துள்ளுவதோ இளமை’ படம் மூலம் தமிழ் திரையுலகிற்குள் எண்ட்ரி கொடுத்தார். சுமார் 21 ஆண்டுகளாக திறமை மிகு நடிகர்களுள் ஒருவராக விளங்கும் இவர் கோலிவுட் மட்டுமன்றி ஹாலிவுட், பாலிவுட் வரை சென்று விட்டார். 

ஆரம்பம்..வளர்ச்சி..உச்சம்..

நடிகர் தனுஷ் (Dhanush), நடிக்க வந்த புதிதிலேயே ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்தார். இவர்களின் குடும்பத்தினர் இணைந்து திருமணம் செய்து வைத்தனர். தனிப்பட்ட வாழ்க்கை ஒரு புறம் இருந்தாலும், தனுஷ் தொடர்ந்து தனக்கு ஏற்ற கதைகளாக தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். மசாலா கலந்த காமெடி படங்களில் ஒரு வருடம் நடித்தால், அடுத்து சீரியஸான ரோல்களை தேர்ந்தெடுத்து நடிப்பார். இப்படி, விதவிதமான கதைகளின் மூலம் ரசிகர்கள் மனங்களில் தனுஷ் இடம் பிடித்தார். வழக்கமான ஹீரோக்கள் போல வெறும் ஆக்ஷன்-மாஸ் மட்டும் காட்டாமல் சிறந்த நடிகராகவும் விளங்கினார். தனது அண்ணன் இயக்கிய துள்ளுவதாே இளமை மற்றும் காதல் கொண்டேன் ஆகிய படங்கள் இவருக்கு அடையாளத்தை கொடுத்ததோடு ஏற்றத்தையும் கொடுத்தது. 

சினிமாவில் வளர்ந்து வந்த காலத்தில் வெற்றி மாறனுடன் கூட்டணி வைத்த இவர், இன்றும் அதே கூட்டணியை தொடர்ந்து வருகிறார். இதுவும், அவர் திரையுலகில் முன்னேற பெரிய பாதையை போட்டு கொடுத்தது. அப்படியே கொஞ்சம் மேலே ஏறி வந்த இவர் பின்னர் பாலிவுட்டிலும் நடிக்க தொடங்கினார். இந்த நிலையில், தி கிரே மேன் என்ற ஹாலிவுட் படத்திலும் கடந்த 2022ஆம் ஆண்டு தனுஷ் நடித்தார் (Dhanush Movies). தற்போது, தமிழ் திரையுலகின் உச்ச நடிகர்களுள் ஒருவராக உள்ளார் தனுஷ். 

பன்முகங்கள்..

தனுஷ், நடிகராக மட்டுமன்றி இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் பன்முகங்களை காட்டி வருகிறார். இவர் வைத்துள்ள தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் வண்டர் பார் ஃபிலிம்ஸ். இதை, இவரும் இவரது முன்னாள் மனைவியும் சேர்ந்து நடத்தி வந்தனர். பல படங்களில், பல ஹீரோக்களுக்கு பின்னணியும் பாடியுள்ளார் தனுஷ். 

மேலும் படிக்க | அமலா பால் அம்மாவாக போறாங்க..ரசிகர்கள் மகிழ்ச்சி!

சம்பளம்-சொத்து மதிப்பு..

நடிகர் தனுஷின் வீடு, சென்னையில் இருப்பதிலேயே மிகவும் வசதியானவர்கள் இருக்கும் இடத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இது, அவரது முன்னால் மாமனார் ரஜினிகாந்த் வீடு இருக்கும் அதே இடம்தான் என கூறப்படுகிறது. தனுஷ் தங்கியுள்ள பங்களா வீடு, சுமார் 25 கோடி இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும், அவர் ஜாக்குவார் எக்ஸ்.ஈ, செடான், ஆடி ஏ8, ஃபோர்ட் முஸ்தாங் உள்ளிட்ட கார்களை வைத்துள்ளாராம். அது மட்டுமன்றி இவர் ரியல் எஸ்டேட்டிலும் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

தனுஷ் ஒரு படத்திற்கு 25-30 கோடி வரை சம்பளம் வாங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது (Dhanush Salary per movie). இவரது சொத்து மதிப்பு, மொத்தமாக ரூ.160 கோடியை தாண்டலாம் என கூறப்படுகிறது (Dhanush Total Net Worth 2024). 

தனுஷின் புதிய படங்கள்..

நடிகர் தனுஷ், கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து ஹிட் படங்களை கொடுக்கும் நாயகனாக உள்ளார். இவர் நடிப்பில் அடுத்து கேப்டன் மில்லர் திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்த படம், உண்மை கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது என கூறப்படுகிறது. இதையடுத்து, தனுஷ் தனது 50 (D 50) படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. அடுத்து அவர் மாரி செல்வராஜ் இயக்கும் ஒரு படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது (Dhanush Upcoming Movies).

மேலும் படிக்க | “செருப்பு பிஞ்சிறும்..” கேப்டன் மில்லர் பட விழாவில் இளைஞரை தாக்கிய பிரபலம்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News