ரொம்ப பெருமையா இருக்கு - விருதுகளை அள்ளிய சூரறைப் போற்றுக்கு தனுஷ் வாழ்த்து

தேசிய விருது வென்ற சூர்யாவுக்கும், ஜிவி பிரகாஷுக்கும், சூரறைப் போற்று படக்குழுவினருக்கும் தனுஷ் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.  

Written by - க. விக்ரம் | Last Updated : Jul 22, 2022, 06:12 PM IST
  • 68ஆவது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன
  • சூரறைப் போற்று படம் மொத்தமாக 5 விருதுகளை அள்ளியுள்ளது
  • படக்குழுவினருக்கு தனுஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ரொம்ப பெருமையா இருக்கு - விருதுகளை அள்ளிய சூரறைப் போற்றுக்கு தனுஷ் வாழ்த்து title=

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடித்து கடந்த 2020ஆம் ஆண்டு வெளியான படம் சூரரைப் போற்று.  ஏர் டெக்கான் நிறுவனத்தின் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை வைத்து இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது.சுவாரசியம் குறையாமல் நேர்த்தியான திரைக்கதையுடன், நடிகர்களின் சிறப்பான நடிப்புடன் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. படம் வெளியானபோதே இந்தப் படத்துக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும். குறிப்பாக சூர்யாவுக்கு தேசிய விருது நிச்சயம் என ரசிகர்கள் ஆரூடம் கூறினர்.

இந்நிலையில் 68ஆவது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. (2020ஆம் ஆண்டு வெளியான படங்கள்). அதில், சிறந்த படமாக சூரறைப் போற்று தேர்வாகியுள்ளது.

Surya

மேலும், சிறந்த நடிகராக சூர்யா, சிறந்த நடிகையாக அபர்ணா பாலமுரளி, சிறந்த திரைக்கதைக்காக சுதா கொங்கரா, சிறந்த பின்னணி இசைக்காக ஜிவி பிரகாஷ் என மொத்தம் 5 தேசிய விருதுகளை சூரறைப் போற்று அள்ளியிருக்கிறது.

இதனையடுத்து நாம ஜெயிச்சிட்டோம் மாறா என ரசிகர்கள் விருது வென்ற சூர்யா உள்ளிட்டோருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.

மேலும் படிக்க | ஜெயிச்சிட்டோம் மாறா - தேசிய விருது வென்றார் சூர்யா

அந்த வகையில் நடிகர் தனுஷ் கூறியுள்ள வாழ்த்து செய்தியில், “தேசிய விருது வென்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகள். குறிப்பாக சூர்யாவுக்கும், எனது நல்ல நண்பர் ஜிவி பிரகாஷுக்கும் வாழ்த்துகள். இந்த நாள் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நாள். பெருமையாக இருக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.

 

முன்னதாக தேசிய விருது வென்றது குறித்து ஜிவி பிரகாஷ் வெளியிட்டிருந்த அறிக்கையில், “ ஒரு நாள் நீ நினைத்தபடி எல்லாம் நடக்கும் நீண்ட காத்திருப்புக்கு பிறகு அந்த நாள் வந்து சேரும்.

மேலும் படிக்க | ’ஜெயிச்சிட்டோம் மாறா’ 5 தேசிய விருதுகளை வென்ற சூரறைப்போற்று

இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி. எனது தந்தை, தாய், மனைவி, குழந்தைகள் என அனைவருக்கும் நன்றி. சூரறைப் போற்று படக்குழுவுக்கு மிகப்பெரிய நன்றி. இந்த நாள் எனது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நாள்” என குறிப்பிட்டிருந்தார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News