இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன எம்.பியாக அண்மையில் தேர்வு செய்யப்பட்டார்.
கலை, அறிவியல், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சாதனை படைத்த படைப்பாளர்களுக்கு மாநிலங்களவையில் நியமன எம்.பி பதவி வழங்குவது மரபாக இருந்துவருகிறது. நடிகர் சிவாஜி கணேசன் உள்ளிட்டோர் இந்தப் பதவியில் ஏற்கெனவே இருந்துள்ளனர்.
இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட 12 பேருக்கு இந்தப் பதவி தற்போது வழங்கப்பட்டுள்ளது. இளையராஜாவின் இத்தனை ஆண்டுகாலக் கலைச்சேவையைக் கெளரவிக்கும் விதமாக இந்த நியமன எம்.பி பதவி அமைந்துள்ளது.
பிரதமர் மோடி முதல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரை பலரும் இளையராஜாவுக்கு இது தொடர்பாக தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
#ramamoorthy #msvishvanathan #Illayaraja pic.twitter.com/t3lBhCnZuz
— A.R.Rahman (@arrahman) July 11, 2022
அதில், இசையமைப்பாளர் டி.கே ராமமூர்த்தி, எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் உள்ளனர். முன்பொரு காலத்தில் நிகழ்ச்சியொன்றில் இவர்கள் நால்வரும் பங்கேற்றபோது எடுக்கப்பட்ட இப்புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.
மேலும் படிக்க | திருமணம் முடிந்து ஒரு மாதம் நிறைவு- புதிய புகைப்படங்களை ரிலீஸ் செய்த விக்கி!
request accepted.. will start composing soon. @arrahman@FirdausOrch #Mercuri https://t.co/oYxghate53
— Ilaiyaraaja (@ilaiyaraaja) March 7, 2022
சில மாதங்களுக்கு முன்னர் துபாய் சென்றிருந்த இளையராஜா, இளையராஜாவின் ஸ்டுடியோவுக்கு விசிட் அடித்தார். இதனை வரவேற்று ட்வீட் செய்திருந்த ஏ.ஆர்.ரஹ்மான், தனது ஸ்டுடியோவுடன் இணைந்து அவர் இசைப் பணி வழங்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டிருந்தார்.
அதனை ஏற்றுகொள்வதாக இளையராஜாவும் பதில் ட்வீட் செய்திருந்தார். விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | ‘விக்ரம்’ல ஹிட் அடிச்ச ‘சக்கு சக்கு’ ஹாரிஸ் ஜெயராஜ் பாட்டா?!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR