19வது சென்னை சர்வதேச திரைப்பட விழா விருதுகள் சிவரஞ்சனியும், சில பெண்களும்

19வது சென்னை சர்வதேசத் திரைப்படத்திருவிழாவில் 'சிவரஞ்சனியும், சில பெண்களும்' படத்துக்கு சிறந்த திரைப்படத்திற்கான விருது வழங்கப்பட்டது

Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jan 7, 2022, 08:42 AM IST
  • 19வது சென்னை சர்வதேச திரைப்பட விழா விருதுகள்
  • தமிழ் திரைப்படப் பிரிவில் சிவரஞ்சனியும், சில பெண்களும் திரைப்படம் விருது பெற்றது
  • சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
19வது சென்னை சர்வதேச திரைப்பட விழா விருதுகள் சிவரஞ்சனியும், சில பெண்களும் title=

19வது சென்னை சர்வதேசத் திரைப்படத்திருவிழா நேற்றுடன் நிறைவடைந்தது.  கடந்த மாதம் 30-ம் தேதி தொடங்கி 8 நாட்கள் நடைபெற்ற 19-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவை 'இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன்' நடத்துகிறது.

இந்தத் திரைப்பட விழாவை பிவிஆர் நிறுவனம் இணைந்து வழங்குகிறது. மொத்தம் 121 திரைப்படங்கள் இந்த விழாவில் திரையிடப்பட்டன.  

ஸ்பெஷல் ஜூரி விருது நடிகை லட்சுமி ப்ரியாவுக்கு வழங்கப்பட்டது. மேலும், வாழ்நாள் சாதனையாளர் விருது இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்க்கு வழங்கப்பட்டது. அமிதா பச்சன் யூத் ஐகான் அவார்டு பாடகர் சித் ஸ்ரீராமுக்கு வழங்கப்பட்டது. 

சென்னை சர்வதேசத் திரைப்படத் திருவிழாவின் இறுதி நாளான நேற்று (ஜனவரி 6, 2022) சென்னை சத்யம் திரையரங்கில் நடந்த நிகழ்ச்சியில், 'சிவரஞ்சனியும், சில பெண்களும்' (Tamil Movie) படத்துக்கு சிறந்த படத்துக்கான விருதும், 3 லட்சம் ரொக்கப்பணமும் வழங்கப்பட்டது. 

award

இரண்டாவது சிறந்த படத்துக்கான விருது தேன் மற்றும் சேத்துமான் என இரண்டு படங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. இந்த இரு திரைப்படங்களுக்கும் சிறந்த படத்துக்கான விருதுடன், 2லட்சம் ரூபாய் ரொக்கமும் பகிர்ந்தளிக்கப்பட்டது.

கர்ணன், உடன்பிறப்பே, தேன், கட்டில், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும், இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும், ஐந்து உணர்வுகள், மாறா, பூமிகா, சேத்துமான், கயமை கடக்க உள்ளிட்ட 11 தமிழ்ப் படங்கள் திரையிடப்பட்டன. 

ALSO READ | Valimai ரிலீஸ் ஒத்திவைப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News