மீண்டும் சாதனை: 1000 திரையரங்குகளில் வெளியான ‘பாகுபலி’

Last Updated : Apr 7, 2017, 12:41 PM IST
மீண்டும் சாதனை: 1000 திரையரங்குகளில் வெளியான ‘பாகுபலி’ title=

1000 திரையரங்குகளில் வெளியான ‘பாகுபலி’ முதல் பாகம்,

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணா போன்றோர் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவான பிரம்மாண்ட திரைப்படமான ‘பாகுபலி’ இன்று மீண்டும் வெளியாகியுள்ளது.

ரூ. 600 கோடி வரை வசூலித்து பல சாதனைகளைச் செய்த ‘பாகுபலி’ திரைபபடத்தின் இரண்டாம் பாகம் இந்த மாதம் ஏப்ரல் 28-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில், 'பாகுபலி' படம் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

‘பாகுபலி’ படம் சுமார் 1000 திரையரங்குகளில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்தியில் கரண் ஜோகரின் 'தர்மா புரொடக்ஷன்ஸ்' வெளியிட்டுள்ளது. 

 

 

Trending News