டெல்லி JNU பல்கலை., பேராசிரியர் மீது பாலியல் தூண்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது!
டெல்லி JNU பல்கலை கழகத்தின் சமூக அறிவியல் துறை பேராசிரியர் மீது பாலியல் தூண்டல் வழக்கினை அத்துறை மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.
முன்னதாக JNU பேராசிரியர் அதல் ஜோஹரி-ன் மீதான வழக்கு தொடர்பாக அவரை இடைநீக்கம் செய்துள்ள நிலையில் தற்போது மீண்டும் மற்றொரு ஆசிரியரின் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுடெல்லி வசந்த குன்ச் பகுதி காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
School of Social Sciences student in Jawaharlal Nehru University (JNU) accused professor of molestation. Case registered #Delhi
— ANI (@ANI) April 14, 2018
முன்னதாக இம்மாத முற்பகுதியில், JNU பேராசிரியர் அதல் ஜோஹரி மீது 9 மாணவிகள் பாலியல் தூண்டல் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியர் அதல் ஜோஹரி பல்கலை நிர்வாக பணியில் இருந்து விலகினார். எனினும் மாணவர்களின் போராட்டம் தொடர, தென்மேற்கு பகுதி காவல் நிலைய அதிகாரி மில்லிண்ட் தும்பரே பேராசிரியின் மீது IPC 354, 509 ஆகிய பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவித்து போராட்டத்தினை கட்டுக்குள் கொண்டுவர முற்பட்டனர். எனினும் போராட்டம் ஓய்ந்தபாடில்லை.
இதனையடுத்து குற்றம்சட்டப் பட்ட பேராசிரியர் அதல் ஜோஹரி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றம் முன் நிருத்தப்பட்டார். இதனையடுத்து தான் கைது செய்யப்பட்டால் தன் பணிக்கு பாதிப்பு ஏற்படும் என அவர் ஜாமின் கோரி விண்ணப்பித்தார். இதனையடுத்து அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது.
பின்னர் குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியர் நீக்கப்படவேண்டும் எனவும், அவர் மீண்டும் கல்லூரியினுள் வரகூடாது எனவும் JNU மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்திவந்த நிலையில் அவர் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்த விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் தற்போது மற்றொரு பேராசிரியர் பாலியல் வழக்கில் சிக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.