ஜெயலலிதா படத்தை அகற்ற உத்தரவிட முடியாது - உயர்நீதிமன்றம்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா புகைப்படத்தினை தமிழக சட்டசபையில் இருந்து அகற்றக் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது!

Last Updated : Apr 27, 2018, 05:08 PM IST
ஜெயலலிதா படத்தை அகற்ற உத்தரவிட முடியாது - உயர்நீதிமன்றம்! title=

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா புகைப்படத்தினை தமிழக சட்டசபையில் இருந்து அகற்றக் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது!

கடந்த பிப்ரவரி 12-ஆம் நாள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா புகைப்படத்தினை சபாநாயகர் தனபால் அவர்கள் திறந்து வைத்தார். இந்த செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என உச்சநீதிமன்றம் உறுதி செய்திருப்பதால் அவரது படத்தை திறக்க கூடாது என எதிர்க்கட்சிகள் தங்கள் கருத்தினை முன்வைத்தனர். 

இதனையடுத்து சட்டசபையில் ஜெயலலிதா அவர்களின் படம் திறக்கப்பட்டதை எதிர்த்து அன்பழகன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் அமர்வு, இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. 

இந்த மனுவினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சபாநாயகரின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது. நீதித்துறையை எளிதாக அணுகும் முறையை இது போன்ற வழக்குகளால் தவறாக பயன்படுத்தக் கூடாது என கூறி மனுவினை தள்ளுபடி செய்தது.

Trending News