‘இந்த’ ராசிக்காரர்களுக்கு ‘அந்த மாதிரியான’ கனவுகள் அதிகம் வருமாம்! லிஸ்டில் உங்கள் ராசி உள்ளதா..?

ஒவ்வொரு ராசியினருக்கும் ஒவ்வொரு மாதிரியான கனவுகள் வரும். அதிலும் குறிப்பிட்ட சில ராசி காரர்களுக்கு உடலுறவு சம்பந்தமான கனவுகள் வரலாம். இதற்கு என்ன அர்த்தம்? குறிப்பிட்ட அந்த ராசிக்காரர்களுக்கு மட்டும் இவ்வகையான கனவுகள் வருவது ஏன்? அவர்களுக்கு எந்த மாதிரியான உடலுறவு கனவுகள் வரும்? அதற்கான காரணம் என்ன? இதில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Written by - Yuvashree | Last Updated : May 30, 2023, 04:54 PM IST
  • இந்த ராசிக்காரர்களுக்கு உடலுறவு குறித்த கனவுகள் வருமாம்.
  • சிலருக்கு அதிக ஆர்வத்தால் இந்த கனவுகள் ஏற்படுமாம்.
  • இந்த லிஸ்டில் என்னென்ன ராசிகள் உள்ளது தெரியுமா?
‘இந்த’ ராசிக்காரர்களுக்கு ‘அந்த மாதிரியான’ கனவுகள் அதிகம் வருமாம்! லிஸ்டில் உங்கள் ராசி உள்ளதா..?  title=

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான கனவுகள் வரும். ஒரு சிலருக்கு எப்போதும் ஒரே கனவுகள் வரும். ஒரு சிலருக்கு வந்த கனவு நினைவில் கூட இருக்காது. ஆனால் குறிப்பிட்ட ராசி காரர்களுக்கு மட்டும் எப்போதும் உடலுறவு தொடர்பான கனவுகள் வந்து கொண்டே இருக்குமாம். அது எந்தெந்த ராசிகளுக்கு என்று தெரியுமா? 

உடலுறவு சம்பந்தப்பட்ட கனவுகள்…

கனவுகள், நமது ஆழ்மனதின் வெளிபாடுதான் எனக்கூறப்பட்டாலும் இது ஏதாவது ஒரு வகையில் நமது இயல்பு வாழ்க்கையாேடு தொடர்புடைய ஒன்றாக இருக்கும். வழக்கமாக நமக்கு வரும் கனவுகள் போலத்தான் உடலுறவு கனவுகளும். நாம் யாருடன் உடலுறவு கொள்வது போல கணவு காண்கிறோமாே அதற்கு ஏற்றார் போல அந்த கனவிற்கான அர்த்தம் மாறுபடும். உதாரணத்திற்கு நீங்கள் உங்களுக்கு பிடித்த நடிகர் அல்லது நடிகையுடன் உடலுறவு வைத்துக்கொள்வது போல கனவு வரலாம். இதற்கு, நீங்கள் அவர்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளீர்கள் என்பதே காரணம். சமயங்களில் யாரோ முகம் தெரியாத ஒருவருடன் உடலுறவு கொள்வது போலக்கூட கனவுகள் வரலாம். ஆனால், அவரை எங்காவது நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவரது முகம் உங்களுக்கு மறந்து போயிருக்கும். அதற்காக அவர்களால் நீங்கள் ஈர்க்கப்பட்டுள்ளீர்கள் என்ற அர்த்தம் இல்லை. சரி, 12 ராசிகளில் எந்த ராசிக்காரர்களுக்கு இதுபோன்ற கனவு அதிகம் வருகிறது என்பதை தெரிந்து கொள்வோமா?

மேலும் படிக்க | சனியுடன் பல கிரகங்களின் மாற்றம்: ஜூன் மாதம் இந்த ராசிக்காரர்களை பாடாய் படுத்தும், ஜாக்கிரதை!!

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்கள் எப்போதும் எதையவது கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் இருப்பவர்கள். இவர்கள், ஏதாவது ஒரு புது அனுபவத்தை ஏற்படுத்துக்கொள்ள வேண்டும் என்று தேடிக்கொண்டேயிருப்பர் என கூறப்படுகிறது. இப்படி எதையாவது ஆராய்ந்து கொண்டே இருக்கும் மிதுன ராசி காரர்களின் ஆழ்மனதிலும் இந்த எண்ணம் இருந்து கொண்டே இருக்கும். இது, அவர்களது கனவு உலகிற்குல்லும் நுழைந்து அவர்களுக்கு பலவகையான அதீத கற்பனைகளை உருவாக்கும். அதில், பாலியல் கற்பனைகளும் அடக்கம். எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அவர்களது மூளையால் அவர்களுக்கு உடலுறவு தொடர்பான கனவுகள் ஏற்படலாம். 

துலாம்:

துலாம் ராசிக்காரர்கள், அவர்களின் உடல் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதில் உருதியாக இருப்பார்களாம். இந்த வகையான பண்புடைய துலாம் ராசியை சேர்ந்தவர்களுக்கு அவர்களது ஆசை கனவாக மாற வாய்ப்புள்ளது. இதனால், இவர்களுக்கு காதல் அல்லது காமம் சம்பந்தப்பட்ட கனவுகள் உருவாகலாம். நிஜ வாழ்க்கையில் நிறைவேறாத இவர்களது ஆசைகள் கனவில் நிறைவேறும் எனவும் நம்பப்படுகிறது.

விருச்சிகம்:

விருச்சிக ராசி உடையோருக்கு எப்போதும் உணர்ச்சிகள் ஹை ஆகவே இருக்குமாம். இவர்களுக்கு பாலியல் உணர்வு சமயங்களில் மிகுதியாகவே காணப்படும். எந்த வகையான ஆசை ஏற்பட்டாலும் அதை முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்று நம்புபவர்கள் இவர்கள். இந்த வகையான தீவிர உணர்ச்சிகள் பாலியல் உறவு கொள்ளும் கனவுகளுக்கு இவர்களை கடத்தி செல்கிறது. அது மட்டுமன்றி, இதில் சிலருக்கு எப்போதோ வந்த உடலுறவு கனவு கூட நினைவில் இருக்கும் என கூறப்படுகிறது. 

தனுசு:

தனுசு ராசி உடையோர், சுதந்திர உணர்வு மிக்கவராகவும்  துணிச்சலுடன் இருப்பவராகவும் உணர்வர். கனவிலும் சரி நிஜ வாழ்க்கையிலும் சரி,  இவர்கள் புதுமையான அனுபவங்களை தேடிக்கொண்டே இருப்பராம். இதனால் இவர்களுக்கு உடலுறவு குறித்த கனவுகள் அதிகம் வரும் என கூறப்படுகிறது. 

மீனம்:

12 ராசிகளுள் கடைசி ராசி, மீனம். இவர்கள் எப்போதும் எதையாவது புதிதாக செய்ய ஆசைப்படுவர். இவர்களுக்கும் உடலுறவு குறித்த கனவுகள் வருவதற்கு வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது. இவர்கள் மனது, எதையாவது தேடி அலைந்து கொண்டே இருக்குமாம். தூங்கும் போதும் இவர்களது ஆழ் மனதும் எதையவது தேடிக்கொண்டே இருக்கும். இவர்களுக்கு பாலியல் ரீதியான உணர்வுகளும் கனவுகளும் வருவதற்கு இதுவும் ஒரு காரணம். இயல்பிலேயே இவர்கள் படைப்பாற்றல் மிக்கவர்களாக விளங்குவது இவர்களுக்கு புதுவிதமான உடலுறவு குறித்த கனவுகள் வருவதற்கு ஒரு காரணம்.

இவர்களுக்கு கொஞ்சம் கூச்ச சுபாவம்..

மேற்கூறிய ராசிக்காரர்களை தவிர, பிற ராசிக்காரர்களான ரிஷபம், கடகம், சிம்மம், கன்னி, மகரம் மற்றும் கும்பம் ராசிக்காரர்கள் உடலுறவு பற்றி பேசவோ, அது குறித்து நினைக்கவோ கொஞ்சம் கூச்சப்படுவராம். மற்றவர்களை போல இவர்களால் உடலுறவு பற்றி அவ்வளவு எளிதாக கற்பனை செய்ய முடியாதாம். 

மேலும் படிக்க | இன்னும் 7 நாட்களே.. இந்த ராசிகளுக்கு லாட்டரி, குபேரின் பொக்கிஷம் கைக்கு வரும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News