ஆதார் எண்ணை விருப்பப்படி தேர்வு செய்ய முடியுமா.. UIDAI கூறுவது என்ன..!!!

வாகனத்தின் பதிவு எண்ணைப் போலவே, நம் விருப்பப்படி ஆதார் அட்டையின் எண்ணை எடுத்துக் கொள்ளலாமா என்பது குறித்து UIDAI தகவல் அளித்துள்ளது

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 11, 2021, 01:29 PM IST
  • ஆதார் அட்டை எண் விருப்ப தேர்வு குறித்து நீதிமன்றத்தில் மனு
  • டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்.
  • UIDAI நீதிமன்றத்தில் பதில் அளித்தது.
ஆதார் எண்ணை விருப்பப்படி தேர்வு செய்ய முடியுமா.. UIDAI கூறுவது என்ன..!!! title=

Aadhaar Card: ஆதார் அட்டை இன்றைய காலத்தில் இந்தியாவில் கட்டாய ஆவணம். இது இல்லாமல், நீங்கள் எந்த அரசு அல்லது அரசு சாரா வேலை அல்லது வங்கி தொடர்பான எந்த வேலையும் செய்ய முடியாது. ஆதார் தொடர்பான விதிகள் புர்துப்பிக்கப்படும் போது, அதனை அறிந்து கொள்வது மிகவும் அவசியம். அவ்வப்போது, ​​ஆதார் அட்டை தொடர்பான ஒவ்வொரு தகவலையும் யுஐடிஏஐ வழங்குகிறது. இதைஅ அறிந்து வைத்திருந்தால், நீங்கள் எந்தவிதமான சிக்கலையும் சந்திக்க வேண்டிய நிலை உண்டாகாது.

இதற்கிடையில், இப்போது ஒரு புதிய வழக்கு முன்னுக்கு வந்துள்ளது, வாகனத்தின் பதிவு எண்ணைப் போல, உங்கள் விருப்பப்படி ஆதார் அட்டையின் எண்ணை தேர்ந்தெடுக்க முடியுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இது குறித்து UIDAI அளித்த பதிலை அறிந்து கொள்ளலாம்.

ALSO READ | Ration Card விதிகளில் முக்கிய மாற்றம்; இனி உங்களுக்கு ரேஷன் கிடைக்காமல் போகலாம்..!!

டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு

டெல்லி உயர்நீதிமன்றத்தில், வர்த்தகர் ஒருவர் தனி நபர் விருப்பத்தின் அடிப்படையில், புதிய ஆதார் எண்ணை வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு பதிலளித்த, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), அத்தகைய கோரிக்கையானது மக்கள் தங்கள் விருப்பப்படி வாகன பதிவு எண்ணை தேர்வு செய்வதை போல் இருக்கும் என்று கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

ஆதார் ஆணையம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ஜுஹைப் ஹசன், நீதிபதியிடம், "இது ஒரு காருக்கான ஆடம்பரமான நம்பர் பிளேட்டுக்கான கோரிக்கை போல் இருக்கும்" என்றார். ஆதார் எண் உட்பட மனுதாரரின் தனிப்பட்ட விவரங்கள் சமரசம் செய்யப்பட்டதாகக் கூறப்படுவதால், மக்களின் விருப்பப்படி ஆதார் எண்ணை வழங்கலாம் என கோரும் ஒரு மனுவை நீதிபதி விசாரணை செய்தார். 

தற்போதைய கட்டமைப்பில், ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு "பல நிலை பாதுகாப்பை" வழங்குகிறது என்றும், விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், ஏராளமான மக்கள் தங்கள் ஆதார் எண்ணை மாற்றக் கோருவார்கள் என்றும் ஹசன் கூறினார். மேலும், மனுதாரர் தனது ஆதாருடன் தனது மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை இணைக்க வேண்டும் என்றும் அதனால் ஆதார் எண் தவறாகப் பயன்படுத்தப்படாமல் பாதுகாக்கப்படும் என்றும் அவர் பரிந்துரைத்தார். இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜனவரி மாதம் நடைபெறும். 

ALSO READ | அதிர்ச்சித் தகவல்! ரயில் பயணிகளுக்கு 'இந்த’ சேவை கிடைக்காது; காரணம் என்ன..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News