சினிமா பார்க்கும்போது பலரின் பேவரைட் நொறுக்குத் தீனி பார்ப்கார்ன் தான். இன்னும் சொல்லப்போனால் பாப்கார்ன் இருந்தால் தான் சினிமா பார்ப்பேன் என்பவர்கள் கூட பலர் இருக்கிறார்கள். காரணம், பாப்கார்ன் இல்லாமல் சினிமா பார்த்தால் அவர்களுக்கு திரைப்படம் பார்த்த அனுபவமே இருக்காது என்றளவுக்கு அவர்கள் மாறியிருப்பார்கள். ஆனால் முதன்முறையாக சினிமா தியேட்டருக்குள் செல்பவர்களுக்கு, ஏன் படம் பார்க்கும்போது பாப்கார்ன் சாப்பிடுகிறார்கள்? என்ற கேள்வி எழும். அவர்களும் கூட மற்றவர்களை பார்த்து பாப்கார்ன் வாங்கி சாப்பிட்டுக் கொண்டே இந்த கேள்வியுடன் படம் பார்ப்பார்கள். அப்படியான கேள்வி உடையவர்களுக்கு சுவாரஸ்யமான பதில் இங்கே.
மேலும் படிக்க | மழைக்காலத்தில் கேஸ் சிலிண்டர் வீணாவது தடுக்க டிப்ஸ்! ஒரு மாதம் கேஸ் 2 மாதம் வரும்
இன்று மட்டுமின்றி 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே பாப்கார்ன் மீது மக்கள் மத்தியில் ஒரு மோகம் உள்ளது. திரையரங்குகளில் மக்கள் படம் பார்த்து மகிழும் வகையில் அந்தக் காலத்தில் இந்த சிற்றுண்டியை வைத்திருந்தார்கள். Popped Culture: 'A Social History of Popcorn' in America.. புத்தகத்தின் ஆசிரியர் ஆண்ட்ரூ எஃப். ஸ்மித், பாப்கார்ன் ட்ரெண்டின் வளர்ச்சிக்குக் காரணம், அதன் குறைந்த விகிதம், நேரம் மற்றும் வசதிதான் என்று கூறுகிறார். பாப்கார்ன் மிக விரைவாக தயாரிக்கப்படுகிறது மற்றும் அதன் விலையும் மிகக் குறைவு.
இதனால்தான் பாப்கார்ன் திரையரங்குகளில் கொடுக்கப்பட்டது. காலப்போக்கில் திரையரங்க உரிமையாளர்களும் இதனால் பலன் அடைந்தனர். இன்னொன்று திரையரங்குகள் தொடங்கப்பட்டபோது, அவை மிகவும் ஆடம்பரமாக இருந்தன என்றும், எல்லோராலும் தியேட்டருக்குச் சென்று படம் பார்க்க முடியாத சூழல் இருந்தது. மேலும் திரையரங்குகளில் எதையும் சாப்பிடவோ, குடிக்கவோ தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் காலப்போக்கில் இங்கு உணவு மற்றும் குளிர் பானங்களுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் மக்கள் மத்தியில் கோரிக்கை வலுத்தது.
இதையடுத்து தியேட்டர்களுக்கு வெளியே பாப்கார்ன் விற்பனை தொடங்கியது. பின்னர் தியேட்டர்களும் செலவைக் குறைக்க இது ஒரு நல்ல வழி என்று உணர்ந்தனர், எனவே திரையரங்க உரிமையாளர்களும் தியேட்டர்களுக்குள்ளே பாப்கார்னை விற்கத் தொடங்கினர். மிக சொற்ப விலையில் கிடைக்கக்கூடிய நொறுக்குத் தீனியாக அப்போது இருந்தது. மக்களும் குறைந்த விலையில் பாப்கார்ன் கிடைத்ததால் விரும்பி வாங்கினர். இந்த போக்கு தான் நாளடைவில் சினிமா பார்க்கும்போது பாப்கார்ன் சாப்பிட வேண்டும் என்ற கலாச்சாரமாகவே மாறியது.
மேலும் படிக்க | அமைதியாக இருப்பதால் இத்தனை பலன்கள் கிடைக்குமா? இனிமே கம்முன்னு இருக்கனும்…
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ