Weight Loss Tips: உடல் எடையை குறைக்க வேண்டுமா? இந்த கேள்விக்கு பலரது பதில் 'ஆம்' என்றுதான் இருக்கும். உடல் எடையை குறைக்க பல வழிகள் உள்ளன. எனினும் ஆரோக்கியமான வழியில் உடல் எடையை குறைப்பது மிக முக்கியம். இல்லையென்றால் நாம் பிற சிக்கல்களில் சிக்கிக்கொள்ளக்கூடும். உடல் எடையை குறைக்க உடல் செயல்பாடுகளுடன் ஆரோக்கியமான உணவும் மிக முக்கியம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். உடல் எடையை குறைக்க பலர் பல முயற்சிகளை எடுத்தாலும், சிலருக்கே இதில் வெற்றி கிடைக்கிறது.
சில இயற்கையான, எளிய வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். நாம் தினசரி உண்ணும் உணவிலேயே இதற்கான வழி உள்ளது. தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்கும் ஒரு எளிய வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.
நாம் தினமும் நமது சமையலில் பயன்படுத்தும் பருப்பு வகைகள் கொண்டு உடல் எடையை எளிதாக குறைக்கலாம். பருப்பு வகைகளில் புரதச்சத்து, நார்ச்சத்து, கால்சியம் மற்றும் பிற ஊட்டச்சத்துகள் உள்ளன. இதை உட்கொள்வதால் உடல் எடை குறைவதோடு (Weight Loss) ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படுகின்றது.
உடல் எடையை குறைக்க உதவும் சில பருப்பு வகைகளை பற்றி இங்கே காணலாம்:
1. பச்சைப்பயறு
எடை இழப்புக்கு தேவையான பல கூறுகளும் பண்புகளும் பச்சைப்பயறில் உள்ளன. இதை மூன்று வகைகளில் உட்கொள்ளலாம்.
- முழு பச்சைப்பயறு
- தோலுரிக்கப்பட்ட பச்சைப்பயறு
- உடைத்த பச்சைப்பயறு
பச்சைப்பறில் (Moong Dal) நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இதை உட்கொண்டால் நீண்ட நேரத்திற்கு நமக்கு நிரம்பிய உணர்வு இருக்கும். இதனால் அவ்வப்போது நாம் தேவையற்ற, ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வது தவிர்க்கப்படுகின்றது. இந்த காரணத்தால் இது எடை இழப்புக்கு ஏற்ற உணவாக கருதப்படுகின்றது. இந்த பருப்பில் புரதச்சத்து அதிகமாகவும் கார்போஹைட்ரேட் குறைவாகவும் உள்ளதால் இது எடை இழப்பில் அதிகம் உதவும். குறிப்பாக நமது கலோரி உட்கொள்ளலைக் குறைக்க இது உதவுகிறது.
2. ராஜ்மா
எடை இழப்புக்கு ராஜ்மா (Rajma) சாவல் எனப்படும் ராஜ்மா சாதம் மிக நல்லது. இது வட மாநிலங்களில் மிக பிரபலமான உணவாக உள்ளது. இது சுவையாக இருப்பதோடு, இதில் ஏகப்பட்ட ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன. இதில் புரதச்சத்தும் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. இதை தொடர்ந்து உட்கொண்டு வந்தால், தொப்பை கொழுப்பை (Belly Fat) எளிதாக குறைக்கலாம். எடை இழப்பை தவிர இந்த பிரச்சனைகளுக்கும் ராஜ்மாவால் தீர்வு கிடைக்கும்.
- இதன் கிளைசெமிக் குறியீடும் குறைவாக இருப்பதால், இது நீரிழிவு நோயாளிகளுக்கும் ஏற்றது.
- இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது.
- கொழுப்பை வேகமாக எரிக்க உதவுகிறது.
3. கொண்டைக்கடலை
கொண்டைக்கடலையில் (Chickpeas) அதிக அளவிலான புரதச்சத்து, வைட்டமின்கள், கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை உள்ளன. இவை ஆரோக்கியமான மற்றும் வலுவான செரிமானத்தை ஊக்குவிக்கின்றன. செரிமானம் சீராவதால் இதை உட்கொள்வதால் எடை இழப்பில் நன்மை கிடைக்கும். இதில் அதிகம் உள்ள நார்ச்சத்து பசியைக் குறைத்து, தொப்பை கொழுப்பையும், உடல் எடையையும் குறைக்க உதவுகிறது.
4.மசூர் பருப்பு
மசூர் பருப்பில் பல வித ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி உடல் எடையை குறைக்க உதவுகின்றன. மசூர் பருப்பு (Masoor Dal) உங்கள் தினசரி நார்ச்சத்து தேவையில் 32 சதவீதத்தை வழங்குகிறது. எடை இழப்பில் உதவுவதோடு இதை உட்கொள்வதால் கெட்ட கொலஸ்ட்ராலும் கட்டுக்குள் இருக்கின்றது. பொட்டாசியம், ஃபோலேட் மற்றும் இரும்புச்சத்துள்ள மசூர் பருப்பு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | கோடை கால நோய்கள் வராமல் தடுக்க... நீங்கள் செய்ய வேண்டியவை..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ