வேலை செய்வதற்கான சிறந்த நேரம், பெரும்பாலும் ஒருவரின் தனிப்பட்ட விருப்பத்தேர்வாகவே அமைகிறது. பல மில்லியன் மக்கள் வாழும் இந்த உலகில், அனைவருக்கும் ஒவ்வொரு விதமான வாழ்க்கை முறைகள் இருக்கும். உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள நிலையான உடற்பயிற்சியும், விடாமுயற்சியும் மட்டுமே தேவை. காலையில் உடற்பயிற்சி செய்வதால் என்ன நன்மைகள் ஏற்படும் என்பது குறித்தும், மாலையில் உடற்பயிற்சி செய்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பது குறித்தும் இங்கு பார்ப்போம் வாங்க.
காலை உடற்பயிற்சி:
காலையில் உடற்பயிற்சி செய்வதால் உங்கள் வளர்சிதை மாற்றத்தை நீங்கள் கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம். இது நாள் முழுவதும் கலோரிகளை குறைக்க வழிவகுக்கும். உடலுக்கு தேவையான எண்டோர்பின்களை வெளியிடும் வேலையை காலை உடற்பயிற்சி பார்த்துக்கொள்கிறது. இதனால், நேர்மறையான மனநிலையை மேம்படும். நாள் முழுவதும் கவனச்சிதறல் ஏற்படாமலும் இந்த உடற்பயிற்சி பார்த்துக்கொள்கிறது. நாளின் பிற்பகுதியில் வேறு சில திட்டங்களை மேற்கொள்வதற்கும் காலை உடற்பயிற்சி உதவுகிறது.
இருப்பினும், காலையில் உடற்பயிற்சி செய்த பின்னர் உங்கள் தசைகள் தளர நேரமாகலாம். இதனால், தசை பிடிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். காலையில் எழுந்தவுடன் பிசியாக இருப்பவர்களுக்கு உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்குவது சவாலானதாக இருக்கும்.
மேலும் படிக்க | புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் காளான் சாப்பிடலமா?
மதிய நேரத்தில் உடற்பயிற்சி செய்யலாமா?
ஒரு சிலர் மதிய நேரத்தில் உடற்பயிற்சி செய்வர். இந்த நேரத்தில் தசை மற்றும் உடலின் வெப்பத்தின் செயல்பாடுகள் அதிகளவில் இருக்கும். இந்த நேரத்தில் வர்க் அவுட் செய்தால் அடிபடவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. மதியத்தில் வர்க் அவுட் செய்பவர்கள் குழுவாகவோ அல்லது நண்பர்களுடனோ சேர்ந்து செய்யலாம்.
மாலை நேர உடற்பயிற்சி சரியான தேர்வா?
மாலை நேர உடற்பயிற்சிகள் மன அழுத்தத்தைக் குறைக்கும் செயல்பாடுகளுள் ஒன்றாகும். இது, ஒரு நாளின் இறுதியில் உடற்பயிற்சி செய்பவர்கள் நன்றாக ஓய்வெடுக்க உதவுகிறது. உடல் வெப்பநிலை மற்றும் தசை செயல்பாடு மாலையில் தொடர்ந்து அதிகரித்து, சிறந்த உடற்பயிற்சி செயல்திறனுக்கு வழிவகுக்கும்.உறங்கும் நேரத்துக்கு நெருக்கமான நேரத்தில், தீவிர உடற்பயிற்சிகள் செய்வது சில நபர்களுக்கு அவர்களின் தூக்கத்தின் தரத்தை பாதிக்கலாம், ஏனெனில் உடற்பயிற்சி அட்ரினலின் அளவை அதிகரிக்கிறது. மாலையில் உடற்பயிற்சி செய்வதால், அந்த நேரத்திற்கு பிறகு நம்மால் எந்த வேலையும் செய்ய முடியாமல் போகிறது.
மருத்துவரிடம் ஆலோசனை..
ஒவ்வொரு நபரின் உடல் அமைப்பும், அவர்கள் வர்க் அவுட்டை பொறுத்தும் அவர்களின் உடல்களில் மாற்றங்கள் ஏற்படும். எனவே, எந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்யலாம் என உங்களது உடற்பயிற்சி ட்ரெயினரிடமும், மருத்துவ நிபுணர்களிடமும் ஆலோசனை பெறுவது நல்லது.
மேலும் படிக்க | இருமல் நிற்கவே மாட்டேங்குதா? ‘இந்த’ வைத்தியம் செய்து பாருங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ