எந்த நாட்டில் எப்போது ரம்ஜான் கொண்டாடப்படுகிறது? ஈத் திருவிழாவின் “சாந்த்ராத்” என்றால் என்ன?

Eid -ul-Fitr 2024: பாக்கிஸ்தான், இந்தோனேசியா, சவுதி அரேபியா இன்று சந்திரனைப் பார்க்கிறது! இந்தியாவில் எப்பொழுது ஈத் கொண்டாடப்படும் என்பதைக் குறித்து பார்ப்போம்.

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 9, 2024, 08:07 PM IST
எந்த நாட்டில் எப்போது ரம்ஜான் கொண்டாடப்படுகிறது? ஈத் திருவிழாவின் “சாந்த்ராத்” என்றால் என்ன? title=

Chand Raat of Eid 2024: சவூதி அரேபியா, கத்தார் உட்பட வளைகுடா முஸ்லீம் நாடுகளிலும் புனித ரமலான் மாதம் கடந்த மார்ச் 11 ஆம் தேதியும், இந்தியா, இந்தோனேசியா, மலேஷியா, சிங்கப்பூர் உள்ளிட்ட மற்ற நாடுகளில் மார்ச் 12 ஆம் தேதியும் தொடங்கியது. பொதுவாக இஸ்லாமிய புனிதமான நோன்பு மாதத்தின் நாட்கள் 29 அல்லது 30 வரை இருக்கும். ரமலான் மாதத்தின் முடிவைக் குறிக்கும் வகையில், இஸ்லாமிய மக்கள் பிறை பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். 

உலகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை

அதாவது சில நாடுகளில் பிறை ரமலான் மாதத்தின் 29 ம் நாள் ஏப்ரல் 8 திங்கள்கிழமை அன்று வந்தது. அன்றைய இரவில் பிறை காணப்பட்டால், ஏப்ரல் 9 ம் தேதி செவ்வாய்க்கிழமை ஈத் அல் ஃபித்ர் பண்டிகையின் முதல் நாளாகும். அதேநேரத்தில் சவூதி அரேபியா உட்பட பல முஸ்லீம் நாடுகள், ரமலான் முடிவைக் குறிக்கும் மகிழ்ச்சியான பண்டிகையான ஈத் உல்-பித்ரை, ஏப்ரல் 10 (புதன்கிழமை) அன்று கொண்டாடும். பிறை என்பதை சாந்த்ராத் (சாந்த்-நிலவு, ராத்-இரவு) என்று உருதுவில் அழைக்கப்படுகிறது. 

இந்தோனேசியா, மலேசியாவில் பிறை நிலவு தென்பட்டது

இந்தோனேசியா, மலேசியா மற்றும் மொராக்கோ போன்ற நாடுகளும் பிறை நிலவைக் கண்டதாக அறிவித்துள்ளன. இது ரமலான் முடிவடைவதையும் ஏப்ரல் 10 ஆம் தேதி ஈத் உல்-பித்ர் கொண்டாட்டங்களின் தொடக்கத்தையும் குறிக்கிறது.

மேலும் படிக்க - ரமலான் நோன்பு ஆரம்பம்... கண்டிப்பாக இஸ்லாமியர்கள் செய்யவே கூடாத செயல்கள்!

பாகிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளில் ஈத் கொண்டாட்டம் எப்பொழுது?

பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு, ஈத் தேதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. இந்த நாடுகள் தங்கள் அதிகாரப்பூர்வமாக பிறை நிலவை பார்த்தாக இன்னும் அறிவிக்கவில்லை. இன்று இரவு பிறை நிலவை கண்டால் நாளை (ஏப்ரல் 10, புதன்கிழமை) ஈத் உல்-பித்ரைக் கொண்டாடப்படும்.

முக்கிய இஸ்லாமிய நாடுகள் ஒன்றாக கொண்டாடம் ஈத் திருவிழா

இந்த ஆண்டு, ஈத் பண்டிகைகள் உலகம் முழுவதும் பெரும்பாலும் ஒத்திசைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், குவைத், பஹ்ரைன் மற்றும் எகிப்து போன்ற நாடுகள் அனைத்தும் ஏப்ரல் 10 ஆம் தேதியை ஈத் உல்-பித்ரின் முதல் நாளாக அறிவித்துள்ளன. 

இந்தியாவில் ஈத் கொண்டாட்டம் எப்பொழுது?

இந்தியாவில் பிறையைப் பார்ப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை முஸ்லிம்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். உறுதிப்படுத்தப்படுவதைப் பொறுத்து, ஈத் உல் பித்ர் கொண்டாட்டங்கள் ஏப்ரல் 10 அல்லது ஏப்ரல் 11 இல் தொடங்கலாம். இந்தியா முழுவதும் உள்ள இஸ்லாம் சமூக மக்கள் மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தை எதிர்பார்ப்புடன் தயாராகி வருகின்றன,

மேலும் படிக்க - Ramadan 2021: ரம்ஜான் நோன்பில் நாள் முழுதும் உற்சாகமாக இருக்க Food Tips

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News