பித்ரு தோஷம் என்றால் என்ன? அதற்கான நிவர்த்தி, பரிகாரம் என்ன?

ஒருவர் இறந்த பின்பு அவருக்குரிய பித்ரு கடன்களை முறைப்படி செய்யாதவர்களின் குடும்பத்தில் மனக்கஷ்டம், பணக்கஷ்டம் போன்றவை இருந்து கொண்டே இருக்கும் என்று ஆகமங்கள் கூறுகின்றன. இதை பித்ரு தோஷம் என வகைப்படுத்துகின்றனர்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Apr 11, 2021, 06:16 PM IST
  • பித்ரு தோஷம் என்றால் என்ன?
  • பித்ரு தோஷத்திற்கான பரிகாரம் என்ன?
  • பித்ரு தோஷம் ஏற்படக் காரணம் என்ன?
பித்ரு தோஷம் என்றால் என்ன? அதற்கான நிவர்த்தி, பரிகாரம் என்ன?  title=

ஒருவர் இறந்த பின்பு அவருக்குரிய பித்ரு கடன்களை முறைப்படி செய்யாதவர்களின் குடும்பத்தில் மனக்கஷ்டம், பணக்கஷ்டம் போன்றவை இருந்து கொண்டே இருக்கும் என்று ஆகமங்கள் கூறுகின்றன. இதை பித்ரு தோஷம் என வகைப்படுத்துகின்றனர்.

பித்ரு தோஷம் என்றால் என்ன? இந்த தோஷம் உள்ளவர்களின் வீட்டில் எதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும் என்பதை தெரிந்துக் கொள்வோம். அது ஒரு நல்ல நிவாரணத்தைக் கொடுக்கலாம்.

Also Read | பெருமாளாய் மாறிய நித்தியானந்தா, சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படங்கள்!
 
பெற்றோரை பிள்ளைகள் இகழ்வதும், அவர்களை மதிக்காமல் அவமதிக்கும் செயல்கள் தொடர்வது
ஆன்மீகத்தில் மனம் ஈடுபடாமல் அலைபாய்வது
பணம் மற்றும் சொத்து, பொன், பொருள், பெண் என ஆசையினாலும்பேராசையினாலும் பிறருக்கு தீங்கிழைப்பது  
குழந்தை பிறந்தவுடன் இறந்து போவது 
உற்றார் உறவினரோடு விரோதங்கள் உண்டாவது...
குடும்பத்தில் நிம்மதியின்மை நிலவுவது 
புத்திரன் பகைவனைப் போல செயல்படுவது
மனைவியுடன் சேர்ந்து வாழ முடியாமல் பிரிந்து வாழும் நிலை ஏற்படுவது.

Also Read | கோவில் கொடிமரத்தின் முக்கியத்துவம் என்ன? வாழ்வில் வளம் சேர்க்க கொடிமரத்தை வழிபடும் முறைகளும்

இவ்வாறு பல்வேறு மன கஷ்டங்கள் தொடர்ந்தால் அது உங்கள் குடும்பத்திற்கு பித்ரு தோஷம் இருப்பதை உறுதிப்படுத்துவதாக கருட புராணம் கூறுகிறது. இதுபோன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட, பித்ரு கடன்களை முறைப்படி உகந்த நேரத்தில் செய்யவேண்டும்.  பித்ருகளுக்கு செய்யவேண்டிய காரியங்களை செய்தால் இந்த தோஷம் அகலும். 

அதைத் தவிர பித்ரு தோஷத்திற்கான பரிகாரங்கள் சிலவற்றை புராணங்கள் சொல்லியிருக்கின்றன. அமாவாசை, பௌர்ணமி திதிகளில் விரதம் இருந்து, காலையில் எள் கலந்த சாதத்தை காகத்திற்கு வைத்து வழிபடுவது பித்ரு தோஷத்திற்கான முதல் நிவாரணம். அதேபோல்  அதிகாலை முதல் இரவு 7 மணி வரை வீட்டில் எண்ணெய் தீபம் ஏற்றி, அதை அணையாமல் எரிய விடுங்கள். 

ஆதரவற்றவர்களுக்கு உதவினால், அனாதரட்சகன் உங்கள் குறைகளை நீக்குவார். மாலையில் ஆலயத்திற்கு சென்று வழிபடவும். 

Also Read | மஹாளய பக்ஷத்தில் பித்ருக்களுக்கு ஸ்ரார்த்தம் செய்வது எப்படி?

இறைவனிடம் சரணாகதி அடைந்தால் எந்த தோஷமும் கடவுளின் ஆசியால் கடந்து சென்று விடும்.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News