கழுவேற்றம் என்றால் என்ன? தமிழகத்தில் இருந்த கொடூர தண்டனை

கழுவேற்றம் (impalement) என்பது ஒரு மரணதண்டனை முறையாகும். கூர்மைப்படுத்தப்பட்ட மரம் ஒன்றினில் குற்றவாளியை ஆசன வாய் வழியாக ஏற்றிக் கொல்வது. 

Written by - Dayana Rosilin | Last Updated : Jun 5, 2022, 04:45 PM IST
  • கழுவேற்றம் முறை என்றால் என்ன?
  • தமிழகத்தில் இருந்த கொடூர தண்டனை
  • இன்றும் கிடைக்கப்பெறும் சான்றுகள்
கழுவேற்றம் என்றால் என்ன? தமிழகத்தில் இருந்த கொடூர தண்டனை title=

தமிழகத்திலுள்ள பல கோயில்களில் கழுவேற்றம் குறித்தான ஓவியங்களும், சிற்பங்களும் காணப்படுகின்றன. கழுவேற்றம் அரசை எதிப்பவர்களுக்கும், கள்ளர்களுக்கும் வழங்கப்படும் தண்டனையாக இருந்து வந்துள்ளது. அதாவது கழுமரத்தில் எண்ணெய் தடவி கழுவேற்றப்படுபவனை பிடித்து நிர்வாணமாக்கி, அவனை குண்டுகட்டாகத் தூக்கி ஆசனவாயை கழுமுனையில் வைத்து அப்படியே செருகி விடுவார்கள். 

உடலின் எடையால், எண்ணைதடவிய கூர்மையில் உடல் மெதுவாகக் கீழே இறங்கும். கழு மெதுவாக உடலை துளைத்துக் கொண்டு மேலேறும். கொஞ்சம் கொஞ்சமாக மரம் உடலினுள் ஏற வலி தாங்காமல் அவன் இரவெல்லாம் கூப்பாடு போட்டு மடிந்து போவான். சாதாரணமாக இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்து புதைப்பார்கள். அல்லது எரியூட்டுவார்கள். ஆனால் கழுமரம் ஏற்றப்பட்டவர்களுக்கு இது கிடையாது. கழுவிலேற்றப்பட்ட உடல் பறவைகளுக்கும், நாய்களுக்கும், நரிகளுக்குமே இரையாகும். 

மேலும் படிக்க | 10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

கழுமரம் பெரும்பாலும் மரத்தால் செய்யப்பட்டிருக்கும். அதனால்தான் அதனைக் கழுமரம் என்று குறிப்பிட்டனர். இரும்புக் கழுவும் இருந்தது. இந்த இரும்புக் கழுமரத்தை வெங்கழு என்று குறிப்பிட்டனர். இந்த வெங்கழு தமிழகத்தில் ஈரோடு காளிங்கராயன் கால்வாய்க்கு அருகில் உள்ள 'அய்யனாரப்பன் கோவிலில்' உள்ளது என கூறப்படுகிறது. இதற்குப் பொட்டு வைத்து காத்தவராயன் என்று மக்கள் வழிபட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த வெங்கழுவை காக்க வேண்டி இவ்வாறு செய்திருக்கலாம் எனவே கனிக்கப்படுகிறது. தமிழகத்தில் இருக்கும் வெங்கழு இது ஒன்றுதான் எனக் கருதப்படுகிறது. கழுவேற்றம் குறித்த வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் 15-ஆம் நூற்றாண்டை சேர்ந்த 'மூன்றாம் வ்லாட் ட்ராகுலா' என்னும் ருமேனியாவின் வல்லாஹியா பகுதியின் இளவரசர் ஆவார். இவருக்கு 'கழுவேற்றும் வ்லாட்' (Vlad the Impaler) என்று மற்றொரு பெயரும் உண்டு.

தமிழகத்தில் கழுவேற்ற நிகழ்வுகள் பல்வேறு மாட்டங்களில் நடைபெற்றுள்ளது. அந்த வகையில், இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அருகே பள்ளபச்சேரி கிராமக் கோயிலில் உள்ள ஐந்து கழுமரங்களில் கழுவேற்றிக் கொல்லப்படும் வழக்கம் இருந்துள்ளது. இன்றும் அங்கு அதை நினைவு படுத்தும் விதமாக கழுவேற்றிக் கொல்லப்பட்ட வீரர்களின் நினைவாக வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல, காத்தவராயன் கழுவேற்ற விழாவும் இன்று வரை நடைபெற்றுத்தான் வருகிறது. 

மேலும் படிக்க | ஜூலை முதல் மத்திய ஊழியர்களின் DA உயரும், எவ்வளவு உயரும்

நாட்டார் தெய்வமாக வழிபடப்படும் காத்தவராயன் தொன்மக் கதையில் கழுவேற்றம் குறித்து வருகிறது. இந்நிகழ்வினை குறிக்க ஆண்டுதோறும் காத்தவராயன் கழுவேற்ற விழா நடக்கிறது. சமணர் கழுவேற்றமும் நடந்துள்ளது. சமணர் கழுவேற்றம் என்பது நின்ற சீர் நெடுமாறன் எனும் மன்னன் மதுரையை ஆண்ட காலத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் நிகழ்வாகும். சமணர்கள் நாயன்மார்களில் ஒருவரான திருஞான சம்பந்தரிடம் வாதத்தில் தோற்று கழுவேறினார்கள் என்று பெரியபுராணம் நூலில் உள்ள குறிப்புகள் மூலமாக அறிய முடிகிறது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News