Life vs Fate: டெலிவரி ஆளாக மாறிய அமைச்சர், கதையல்ல நிஜம்!

காலம் யாரை, எங்கு, எப்போது எதற்காக நகர்த்தும்? வாழ்வின் ஆகச் சிறந்த புதிரின் உதாரணம் சையத் அஹ்மத் ஷா சதாத்... முன்னாள் அமைச்சர் முதல் இந்நாள் டெலிவரி பாய் வரையிலான பயணத்திற்கு காரணம்?

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Aug 27, 2021, 06:22 PM IST
  • முன்னாள் அமைச்சர் டெலிவரி பாயான காரணம் என்ன?
  • ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்தவர்
  • தகவல் தொடர்பு மற்றும் மின்னணு பொறியியலில் 2 முதுகலை பட்டங்களை பெற்றவர்
Life vs Fate: டெலிவரி ஆளாக மாறிய அமைச்சர், கதையல்ல நிஜம்! title=

ஆஃப்கானிஸ்தான் அரசில் தொலைதொடர்பு மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்தவர் இன்று பீட்சா டெலிவரி ஆளாக பணிபுரிகிறார். காலம் யாரை, எங்கு, எப்போது எதற்காக நகர்த்தும்? வாழ்வின் ஆகச் சிறந்த புதிரின் உதாரணம் சையத் அஹ்மத் ஷா சதாத்,

2018ம் ஆண்டு வரை நாட்டின் அமைச்சராக பணிபுரிந்தவரை போர்களும், சண்டைகளும் டெலிவரி பாயாக மாற்றிவிட்டது காலத்தின் கொடுமை என்று சொல்லாமல் வேறென்ன சொல்வது?

ஜெர்மனியின் லீப்ஜிக்கைச் சுற்றி சைக்கிளில் சுற்றித் திரிந்து, வீடு வீடாக உணவு விநியோகிக்கும் சாதத் படங்கள் இணையத்தில் வைரலாகிறது. 

ஆப்கானிஸ்தானின் முன்னாள் தகவல் அமைச்சர் சையது அஹ்மத் ஷா சாதத் (Sayed Sadaat), இப்போது லீப்ஜிக்கில் தஞ்சமடைந்துள்ளார், ஜெர்மனியின் தெருக்களில் அவர் பீட்சா விநியோகம் செய்யும் டெலிவரி பையனாக வேலை செய்கிறார்.

தலிபான்களின் மூர்க்கத்தனமான போரால், நாட்டை விட்டு வெளியேறிய ஓராண்டுக்குப் பிறகு, சாதத் இப்போது லீப்ஜிக்கில் (Leipzig) உணவு டெலிவரி செய்யும் பணிக்கு சென்றுவிட்டார்.

அவர் பீட்சா பீஸ்ஸாவை விநியோகிக்கச் செல்லும் வழியில் உள்ளூர் பத்திரிகையாளர் புகைப்படம் எடுத்துவிட்டார். சாதத் தனது சைக்கிளில் நகர் முழுவதும் சுற்றித் திரிந்து, வீடு வீடாக உணவு விநியோகிக்கும் படங்கள் இணையத்தில் வைரலாகிறது.

Also Read | Bizarre Warning! திருமணமாகாத தம்பதிகள் பூங்காவிற்குள் நுழைய வேண்டாம்

ஊடகம் ஒன்றிடம் பேசிய சாதத், சமூக ஊடகங்களில் வைரலாகும் புகைப்படங்கள் தன்னுடையது என உறுதிப்படுத்தினார். இந்த வேலையைச் செய்வதில் எந்தவித குற்றவுணர்வும் இல்லை என்று சொல்லும் சதாத், மறைத்துக் கொண்டு ரகசியமாக வாழ்வதை விடஇப்படி  வேலை செய்து வாழலாம் என்று சொல்கிறார்.

ஆப்கானிஸ்தானின் (Afghanistan) முன்னாள் அமைச்சர் தனது வாழ்வாதரத்திற்காக வேலை செய்ய வேண்டிய கட்டாயம். பீட்சா டெலிவரி ஆளாக வேலை கிடைத்ததும் அதை காலத்தின் கட்டளையாக எடுத்துக் கொண்டு வேலை செய்யத் தொடங்கினார்.

சதாத், அஷ்ரப் கானி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 2018 இல் கேபினட் அமைச்சராக இருந்தார். சாதத், ஆப்கானிஸ்தான் தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார், பின்னர் கடந்த ஆண்டு ராஜினாமா செய்தார். 2020 டிசம்பர் மாதத்தில் அவர் ஜெர்மனிக்கு வந்ததாக கூறப்படுகிறது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்பு மற்றும் மின்னணு பொறியியலில் இரண்டு முதுகலை பட்டங்களையும் பெற்றவர் சாதத் என்பது குறிப்பிடத்தக்கது.

READ ALSO | கொரோனா பாதிப்பு இருந்தபோது உணவுப்பொருட்கள் மீது துப்பிய பெண்ணுக்கு சிறை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News