Weekly Horoscope: இந்த ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பணம் கிடைக்கும்

இந்த வாரம் (மார்ச் 13 முதல் மார்ச் 19 வரை) உங்களுக்கு எப்படி இருக்கும்? மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு இந்த வார எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 13, 2022, 02:21 PM IST
  • ரிஷபம் ராசிக்காரர்கள் பணவரவு பெறலாம்.
  • கடக ராசிக்காரர்களுக்கு சுயமரியாதை அதிகரிக்கும்.
  • மகர ராசிக்காரர்களுக்கு நல்ல பண பலன் கிடைக்கும்.
Weekly Horoscope: இந்த ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பணம் கிடைக்கும் title=

வார ராசிபலன்: இந்த வாரம் (மார்ச் 13 முதல் மார்ச் 19 வரை) சில ராசிக்காரர்களுக்கு பணமழை பொழியப்போகிறது. இந்த நேரத்தில் சிலருக்கு வேலையில் பதவி உயர்வையும் பெறலாம். மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு இந்த வார எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு ஆரம்பப் பகுதியில் உடல்நலம் தொடர்பான சில பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே உங்கள் ஆரோக்கியத்தை சரியான முறையில் கவனித்துக் கொள்ளுங்கள். இந்த வாரம் உங்கள் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. சோம்பேறித்தனம் காரணமாக இந்த வாரம் உங்களின் சில வேலைகள் முழுமையடையாமல் போகலாம்.

 

ரிஷபம்: ரிஷபம் ராசிக்காரர்கள் பணவரவு பெறலாம். வாரத்தின் மத்தியில் வியாபாரம் தொடர்பான வேலைகளில் லாபமும் வெற்றியும் பெறுவீர்கள். இந்த வாரம் உங்களது நிதி நிலை உயர்வைக் காணலாம். உடல்நலம் தொடர்பான விஷயங்களில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருக்கும்.

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு உத்யோகத் துறையில் வெற்றி கிட்டும். உத்தியோகஸ்தர்களுடனான உங்களது நல்லுறவு சிறப்பாக இருக்கும். சகோதரர்கள் மற்றும் நண்பர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு நன்மைகளைத் தரும். குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கை இந்த வாரம் உங்களுக்கு நன்றாக இருக்கும்.

மேலும் படிக்க | இந்த ராசிக்காரர்களுக்கு இன்று அடித்தது ஜாக்பாட்: பண மழை, அன்பு மழை பொழியும்

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு சுயமரியாதை அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் நல்ல ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் மனைவியுடனான உங்கள் உறவு நன்றாக இருக்கும். வாரத்தின் நடுப்பகுதியில் பணிச்சுமை அதிகமாக இருக்கலாம். மாணவர்கள் நல்ல முடிவுகளைப் பெறலாம்.

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்கள் நல்ல பலன்களைப் பெறலாம். இந்த வாரம் உங்களுக்கு பரிசுகள் மற்றும் மரியாதை கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. மாணவர்களுக்கு இந்த வாரம் சாதகமாக இருக்கும். வாரத்தின் நடுப்பகுதியில் உடல்நலப் பிரச்சினைகள் ஏற்ப்படக்கூடும்.

கன்னி: கன்னி ராசிக்காரர்களின் இல்லற வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இந்த வாரம் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய தொழில் கூட்டாளிகளும் இந்த வாரம் உங்களுடையவர்களாக மாறலாம். வாரத்தின் நடுப்பகுதியில் உங்களுக்கு உடல் மற்றும் மன உளைச்சல் ஏற்படலாம்.

துலாம்: துலாம் ராசிக்காரர்களின் பொருளாதார நிலை வலுவடையும். இந்த வாரம் உங்களுக்கு குடும்ப உறுப்பினர்களிடமிருந்து நல்ல ஆதரவு கிடைக்கும். உழைக்கும் வர்க்கத்தினருக்கு இந்த வாரம் நல்ல பலன்கள் தரும். பணியிடத்தில் உள்ளவர்களுடன் உங்கள் உறவு நன்றாக இருக்கும்.

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு வீட்டுப் பொருட்களுக்கு பணம் செலவழிக்க வாய்ப்பு உள்ளது. தாயின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள். உழைக்கும் வர்க்கத்தினருக்கு இந்த வாரம் வேலை அதிகமாக இருக்கலாம். வணிக வகுப்பினருக்கு இந்த வாரம் சாதகமாக இருக்கும்.

தனுசு: தனுசு ராசிக்காரர்கள் நல்ல பலன்களைப் பெறலாம். இந்த வாரம் குடும்ப விஷயங்களில் சற்று எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும். உங்கள் மனைவியுடன் அன்பு அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. இந்த வாரம் உங்கள் நிதி நிலை பலவீனமாக இருக்கலாம்.

மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு நல்ல பண பலன் கிடைக்கும். இந்த வாரம் உங்கள் வருமானம் உயரும் வாய்ப்பு உள்ளது. இந்த வாரம் காதல் விஷயங்களில் வெற்றி கிடைக்கும். மாணவர்களுக்கு இந்த வாரம் வெற்றிகரமாக இருக்கும். உங்கள் குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கை இந்த வாரம் இனிமையாக இருக்கும்.

கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மதிப்பும் மரியாதையும் கூடும். இந்த வாரம் சகோதர சகோதரிகளால் சில நல்ல பலன்களைப் பெறலாம். வேலையைப் பொறுத்தவரை இந்த வாரம் உங்களுக்கு நன்றாக இருக்கும்.

மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு பணம் சம்பந்தமான விஷயங்களில் சில பிரச்சனைகள் ஏற்படலாம். உங்கள் குடும்ப வாழ்க்கையில் இனிமை அதிகரிக்கும். இந்த வாரம் உங்கள் வசதிகள் அதிகரிக்கலாம். மாணவர்களுக்கு இந்த வாரம் மிகவும் கடினமாக இருக்கும். பயனற்ற செயல்களில் இருந்து விலகி இருங்கள்.

 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | சிவலிங்கத்தின் பிரசாதத்தை சாப்பிட வேண்டாம்! பிரசாதமே சாபமாகும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News