உடல் பருமன் தோற்றத்தை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், பல கடுமையான நோய்களையும் உண்டாக்குகிறது. எனவே உடல் பருமனை கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம். இருப்பினும், உடல் எடையை குறைப்பது அத்தனை எளிதல்ல. ஆனால், அது மிகவும் எளிது என்கிறார் அமெரிக்காவை சேர்ந்த ஒரு நபர். உடல் பருமன் என்பது இன்றைய காலத்தின் மிக முக்கியமான பிரச்சனையாக உள்ள நிலையில், அமெரிக்காவில் கோஸ்டாரிகாவைச் சேர்ந்த ஒரு நபர் 21 நாட்களில் 13 கிலோ எடையை குறைத்த சம்பவம் பெரும் வைரலாகி வருகிறது.
சமீபத்தில், கோஸ்டாரிகாவில் வசிக்கும் எடிஸ் மில்லர், தனது பிட்ன்ஸ் ரகசியத்தை வெளியிட்டது சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகி வருகிது. வெறும் 21 நாட்களுக்கு தண்ணீர் மட்டுமே குடித்ததன் மூலம் 13 கிலோ எடையை குறைத்ததாக (Weight Loss Tips) அடிஸ் மில்லர் கூறியுள்ளார். எடை இழப்புக்கான இந்த முறை நீர் விரதம் என்று கூறப்படுகிறது (Water Fasting). இருப்பினும், எடை இழப்புக்கான இந்த முறை உங்களுக்கு எந்த அளவிற்கு பாதுகாப்பானது என்பதை பற்றி நிபுணர்கள் கூறுவதை தெரிந்து கொள்வோம்...
நீர் விரதம் என்றால் என்ன?
நீர் விரதம் (Water Fasting) என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தண்ணீரை மட்டுமே குடித்து வருவதாகும். இந்த கால அளவு 24 மணிநேரம் முதல் பல வாரங்கள் வரை இருக்கலாம். அடிஸ் மில்லரின் விஷயத்தில் அவர் 21 நாட்கள் நீர் விரதம் இருந்துள்ளார். இது உடலில் சேரும் நச்சுக்களை நீக்கி செரிமானத்தை மேம்படுத்துகிறது என்றும் மன தெளிவைக் கொண்டு வருகிறது என்றும் கூறப்படுகிறது. இது மட்டுமல்லாமல், நீர் விரதம் மூலம் எடையைக் குறைப்பதோடு மட்டுமின்றி, இன்சுலின் உணர்திறனும் மேம்படும் என்று சில ஆய்வுகள் எடுத்து காட்டுகின்றன.
நாம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, தண்ணீரை மட்டுமே உட்கொள்ளும்போது, உங்கள் உடல் கெட்டோசிஸ் நிலைக்குச் செல்கிறது. உணவில் இருந்து குளுக்கோஸ் கிடைக்காத நிலையில், ஆற்றலை பெற, உடலில் சேமிக்கப்பட்டுள்ள கொழுப்பை எரித்து அதன் மூலம் ஆற்றலை பெறுகிறது. இதனால், உடல் பருமன் குறையும். கூடுதலாக, நீர் உண்ணாவிரதம், உடலில் அழற்சிக்கு காரணமான சேர்மங்களின் அளவைக் குறைப்பதன் மூலம் வீக்கத்தைக் குறைக்கும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | மழை காலத்தில் பரவும் பயங்கர நோய்கள்... குழந்தைகளை காக்கும் இந்த 5 உணவுகள்!
நீர் விரதம் எந்த அளவிற்கு பாதுகாப்பானது?
பொதுவாக எந்த ஒரு டயட் முறையையும் பின்பற்றுவதற்கு முன், முதலில் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது முக்கியம். ஏனெனில் தண்ணீர் விரதத்தின் போது, உடல் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படலாம். மேலும், பலவீனம், சோர்வு, தலைவலி மற்றும் வயிற்று வலி போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
இது மட்டுமின்றி, நீண்ட நேரம் தண்ணீர் விரதம் இருப்பதால், தசை இழப்பு ஏற்படலாம். எலும்புகள் வலுவிழந்து, இதய பிரச்சனைகள் மற்றும் உயிருக்கு ஆபத்து கூட ஏற்படும். எனவே, முதலில் ஒரு மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று, அதன் பிறகுதான் அதனை கடைபிடிப்பது குறித்து முடிவு எடுக்க வேண்டும். உடல் பருமனை குறைக்க குறுக்கு வழியை நாடுவது ஆபத்தாக முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.
தண்ணீர் விரதம் வேகமாக உடல் எடையை குறைக்க எளிதான வழியாக இருக்கலாம். ஆனால் இது அனைவருக்கும் ஏற்றதும் அல்ல. பாதுகாப்பானதும் அல்ல. அதிலும், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் பெண்கள், நீரிழிவு நோயாளிகள், உடல் எடை குறைவாக உள்ளவர்கள் தண்ணீர் விரதத்தை தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
உடல் பருமனைக் குறைக்க மருத்துவரின் ஆலோசனை
உடல் பருமனைக் குறைக்க விரும்பினால், ஒரு மருத்துவர் அல்லது உணவியல் நிபுணரை அணுகுவது நல்லது. அவர்கள் உங்கள் உடல் நிலைக்கும், வாழ்க்கை முறைக்கும் ஏற்ப ஒரு சீரான உணவுத் திட்டத்தைத் தயாரித்து கொடுக்கலாம். உங்களின் ஊட்டச்சத்து தேவைகளை கருத்தில் கொண்டு அவர் தயாரிக்கும் டயட் உங்களுக்கான சிறந்த டயட் ஆக இருக்கும். வழக்கமான உடற்பயிற்சியும், மருத்துவரின் டயட்டும் உடல் பருமனை குறைக்க பெரிதும் உதவும்.
மேலும் படிக்க | வயிற்றுப்போக்கை நிறுத்த முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ