கூந்தல் உதிர்வை தடுக்க வேண்டுமா?... புரத உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்

புரத உணவுகளை சேர்த்துக்கொள்வதன் மூலம் கூந்தல் உதிர்வை தடுத்து நிறுத்தலாம்.

Written by - க. விக்ரம் | Last Updated : Sep 9, 2022, 07:17 PM IST
  • கூந்தல் உதிர்வை தடுப்பதற்கான வழிகள்
  • புரத உணவுகள் கூந்தல் உதிர்வை தடுக்கின்றன
  • இறைச்சியும் கூந்தல் உதிர்வை தடுக்கிறது
கூந்தல் உதிர்வை தடுக்க வேண்டுமா?... புரத உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள் title=

ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் கூந்தல் விஷயத்தில் அனைவருமே தங்களது கவனத்தை செலுத்துவார்கள். ஆனாலும் பலருக்கு கூந்தல் அதிகளவு உதிர்ந்துவிடுகிறது. இதனால் அவர்கள் பல்வேறு முறையை பின்பற்றி கூந்தல் உதிர்வை தடுத்து நிறுத்தவும், கூந்தல் வளர்ச்சியை அதிகப்படுத்தவும் முயற்சி செய்வார்கள். இருப்பினும், புரத உணவுகளை அதிகம் சேர்த்துக்கொண்டால் கூந்தல் உதிர்வை எளிதில் தடுத்து நிறுத்தலாம். அப்படி எந்தெந்த உணவை எடுத்துக்கொண்டால் கூந்தல் உதிர்வை தடுத்து நிறுத்தலாம் என்பன பின்வருமாறு:

பால் மற்றும் முட்டை: 

பால், தயிர் மற்றும் முட்டை போன்றவற்றில் இரும்புச்சத்து, வைட்டமின் பி – 12, கொழுப்பு அமிலங்கள் மற்றும் புரதச்சத்து அதிகளவில் நிரம்பியுள்ளதால் முடி உதிர்வை பெருமளவு தடுப்பதற்கு அவை உதவுகின்றன. எனவே இதனை தினமும் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளும்போது உடல் ஆரோக்கியத்தோடு கூந்தல் வளர்ச்சிக்கும் உதவியாக உள்ளது. மேலும் பால் சம்பந்தப்பட்ட பொருட்கள் மற்றும் முட்டைகள் இடைவெளியை ஈடுசெய்து வளர்ச்சியை அதிகரிக்கின்றன.

மேலும் படிக்க | கொலஸ்ட்ராலுக்கும் நீரிழிவுக்கும் எமனாகும் கருமிளகு எனும் அருமருந்து

பருப்பு: 

துத்தநாகம், நார்ச்சத்து, இரும்பு, ஃபோலிக் அமிலம் மற்றும் மெக்னீசியம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் பருப்பில் உள்ளது. இதோடு அதிகளவு ஃபோலிக் அமிலம் உள்ளதால் கூந்தல் உதிர்வை தடுத்து  வலுவாகவும் அடர்த்தியாகவும் கூந்தலை வைத்திருக்க உதவுகிறது.

Puradham

இறைச்சி: 

உடலுக்கு ஆரோக்கியம் மற்றும் முடி வளர்ச்சிக்குத் தேவையான புரதம் இறைச்சியில் உள்ளதால் இதனை வாரத்திற்கு ஒரு முறை அல்லது இருமுறையாவது நம்முடைய உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

மீன்: 

மீன் சாப்பிடுவது நேரடியாக கூந்தலுக்கு ஆதாரமாக இருப்பதால் அதன் அடிவரை சென்று ஊட்டமளிப்பதோடு கூந்தல் வேர்களை அடர்த்தியாக வளர்க்கிறது. இதனால் அடர்த்தியான மற்றும் ஆரோக்கியமான கூந்தல் உருவாகும். அதுமட்டுமின்றி மீன்களில்  ஏ,கே,டி மற்றும் ஈ போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் கூந்தல் உதிர்வு தடுத்து நிறுத்தப்படுகிறது.

மேலும் படிக்க | Grey Hair: நரை முடியை கருமையாக்கும் காபி டிகாக்‌ஷன்; பயன்படுத்துவது எப்படி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News