வசந்த பஞ்சமி: இந்த வகையில் சரஸ்வதி பூஜை செய்தால் அறிவாற்றல் அதிகரிக்கும், கலைகள் பெருகும்

இந்து மதத்தைப் பொறுத்தவரை, ஒவ்வொரு பூஜைக்கும் ஒவ்வொரு விதி கூறப்பட்டிருந்தாலும், மனதில் இருக்கும் நம்பிக்கையும், பூஜை செய்ய வேண்டும் என்ற எண்ணமும்தான் முக்கியமானவையாக கருதப்படுகின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 5, 2022, 02:30 PM IST
  • வசந்த பஞ்சமி, இந்தியாவில் வசந்த காலத்தின் வருகையை குறிக்கிறது.
  • வசந்த பஞ்சமியன்று நாள் முழுவதும் சரஸ்வதி தேவியை துதித்து அருள் பெறலாம்.
  • உங்கள் பிரார்த்தனையையும், பிரசாதங்களையும் பக்தியையும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்னை சரஸ்வதியை அழைக்கவும்.
வசந்த பஞ்சமி: இந்த வகையில் சரஸ்வதி பூஜை செய்தால் அறிவாற்றல் அதிகரிக்கும், கலைகள் பெருகும் title=

வசந்த பஞ்சமி 2021: வசந்த பஞ்சமி, இந்தியாவில் வசந்த காலத்தின் வருகையை குறிக்கிறது. இது ஒவ்வொரு ஆண்டும் வசந்த காலத்தின் துவக்கத்தை குறிக்கும் வகையில் தை மாதத்தில் அமாவாசைக்குப் பிறகு வரும் பஞ்சமியில் கொண்டாடப்படுகின்றது. இது வழக்கமாக ஜனவரி அல்லது பிப்ரவரி மாதங்களில் வரும். இந்த விழா இந்து மதத்தில் அறிவாற்றல், இசை மற்றும் கலைகளுக்கு அதிபதியாக விளங்கும் சரஸ்வதி அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. வட இந்தியாவில் இந்த நாள் மிகவும் பிரசித்தியாக கொண்டாடப்படுகின்றது.

இன்று சரஸ்வதி பூஜை செய்ய உகந்த நேரம்

பொதுவாக பஞ்சமி (அமாவாசை அல்லது பௌர்ணமிக்கு ஐந்தாவது நாள்) திதியில் காலை வேளையில் சரஸ்வதி தேவியை துதிப்பது மிகவும் உகந்த நேரமாக கருதப்படுகின்றது. இருப்பினும், வசந்த பஞ்சமி அன்று நாள் முழுவதும் சுபமாக கருதப்படுவதால், இன்று முழுவதும் சரஸ்வதி தேவியை துதித்து அருள் பெறலாம்.

இந்த ஆண்டு வசந்த பஞ்சமி:

பஞ்சமி திதி தொடங்கும் நேரம்: பிப்ரவரி 16 அதிகாலை 3:36 மணிக்கு

பஞ்சமி திதி முடியும் நேரம்: பிப்ரவரி 17 அதிகாலை 5:46 மணிக்கு.

வசந்த் பஞ்சமி சுப நேரம்: பிப்ரவரி 16 காலை 6:59 மணி முதல் மதியம் 12:35 மணி வரை

வசந்த் பஞ்சமி சரஸ்வதி பூஜை செய்ய உங்களுக்கு தேவையான பொருட்கள்

வசந்த பஞ்சமி பூஜைக்கு பூஜை சாமாங்களைத் தவிர, மாவிலை, சந்தனம், மஞ்சள், அக்ஷதை, குங்குமம், சரஸ்வதி யந்திரம் மலர்கள் ஆகியவை தேவைப்படும். பொதுவாக பூஜையின் போது மஞ்சள் ஆடைகளை அணிந்துகொள்வதும், கேசரி, எலுமிச்சை சாதம், குங்குமப் பூ போட்ட பாயாச வகைகள் ஆகிய மஞ்சள் நிற பிரசாதங்களை அன்னைக்கு படைப்பதும் சிறப்பு. இந்து மதத்தைப் பொறுத்தவரை, ஒவ்வொரு பூஜைக்கும் ஒவ்வொரு விதி கூறப்பட்டிருந்தாலும், மனதில் இருக்கும் நம்பிக்கையும், பூஜை செய்ய வேண்டும் என்ற எண்ணமும்தான் முக்கியமானவையாக கருதப்படுகின்றன. நம்மிடம் இருக்கும் பொருட்களைக் கொண்டு தூய்மையான மனதோடு செய்யப்படும் பூஜைகயிலும் கடவுள் ஆனந்தம் கொண்டு அருளைப் பொழிகிறார்.

சரஸ்வதி பூஜை செய்வது எப்படி

வசந்த் பஞ்சமி பூஜையைத் தொடங்க, ஒரு மணை அல்லது மர பலகையில், மஞ்சள் / சிவப்பு துணியைப் பரப்பி, அதன் மீது சரஸ்வதி தேவியின் புகைப்படம் அல்லது சிலையை வைக்கவும். உங்கள் புத்தகங்களை அல்லது உங்கள் குழந்தைகளின் பள்ளி புத்தகங்களை சரஸ்வதி தேவியின் காலடியில் வைக்கவும்.

ALSO READ: சிவலிங்கத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா? அல்லது ஆலயத்தில் மட்டுமே தரிசிக்க வேண்டுமா?

நெய் / எண்ணெய் கொண்டு விளக்கை ஏற்றி, தூபங்களையும் ஏற்றி வைக்கவும். உங்களுக்கு தெரிந்த மந்திரங்களை சொல்லி, அட்சதை, குங்குமம் மற்றும் மலர்களால் அன்னைக்கு பூஜை செய்யவும். உங்கள் பிரார்த்தனையையும், பிரசாதங்களையும் பக்தியையும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்னை சரஸ்வதியை அழைக்கவும்.

பொதுவாகவே பஞ்சமி (Panchami) திதி என்பது சப்த மாதர்களில் ஒருத்தியாகத் திகழும் வாராஹி தேவியை வழிபடுவதற்கு உரிய நாள். வசந்த காலத்தில் வரும் நவராத்திரியை ஷ்யாமளா நவராத்திரி என்பது வழக்கம். எனவே சியாமளா நவராத்திரி காலத்தில், வசந்த பஞ்சமி திதியில், அம்பிகையை மனமுருக, ஆத்மார்த்தமாக வழிபட்டால், துஷ்ட சக்திகள் அண்டாது. எதிர்ப்புகள் தவிடுபொடியாகும். இல்லத்தில் இதுவரை தடைப்பட்டிருந்த சுபகாரியங்கள், மங்கல விசேஷங்கள் தடையின்றி நிகழும்.

சரஸ்வதி பூஜைக்கான பூஜை மந்திரத்தை அறிந்து கொள்ளுங்கள்

வசந்த பஞ்சமி சரஸ்வதி பூஜையின் போது பொதுவாக கூறப்படும் மந்திரம் இதுதான்:

யா குந்தேந்து துஷாரஹாரதவலா யா ஶுப்ரவஸ்த்ராவ்ருதா

யா வீணாவரதண்டமண்டிதகரா யா ஶ்வேதபத்மாஸனா .

யா ப்ரஹ்மாச்யுதஶங்கரப்ரப்ருதிபிர்தேவைஸ்ஸதா பூஜிதா

ஸா மாம் பாது ஸரஸ்வதீ பகவதீ நிஶ்ஶேஷஜாட்யாபஹா

தோர்பிர்யுக்தா சதுர்பிம் ஸ்படிகமணினிபை ரக்ஷமாலாந்ததானா

ஹஸ்தேனைகேன பத்மம் ஸிதமபிச ஶுகம் புஸ்தகம் சாபரேண ।

பாஸா குந்தேந்துஶங்கஸ்படிகமணினிபா பாஸமானாऽஸமானா

ஸா மே வாக்தேவதேயம் நிவஸது வதனே ஸர்வதா ஸுப்ரஸன்னா

ஸுராஸுராஸேவிதபாதபங்கஜா கரே விராஜத்கமனீயபுஸ்தகா ।

விரிஞ்சிபத்னீ கமலாஸனஸ்திதா ஸரஸ்வதீ ந்ருத்யது வாசி மே ஸதா

எங்கள் வாசகர்களுக்கு மகிழ்ச்சியான வசந்த பஞ்சமி சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்!!

ALSO READ: இறைவழிபாட்டில் பசுவுக்கும், பாம்புக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பது ஏன்?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News