இணையவாசிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய 'திருநங்கை' பொம்மை..!

திருநங்கைகளை சுட்டிக்காட்டும் ஆண்குறியுடன் உருவாக்கப்பட்ட 'திருநங்கை' பெண் பொம்மை இணையவாசிகளை கோபப்படுத்தியுள்ளது!

Last Updated : Jan 20, 2020, 05:12 PM IST
இணையவாசிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய 'திருநங்கை' பொம்மை..! title=

திருநங்கைகளை சுட்டிக்காட்டும் ஆண்குறியுடன் உருவாக்கப்பட்ட 'திருநங்கை' பெண் பொம்மை இணையவாசிகளை கோபப்படுத்தியுள்ளது!

இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகலாவும் இருக்கலாம். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் மூலம் நம்மிடம் வந்து சேர்க்கிறது. அது வாழ்நாளில் நம்மால் மறக்க முடியாத நிகழ்வாக கூட அமையலாம். இந்நிலையில், ஆண்குறியுடன் உருவாக்கப்பட்ட 'திருநங்கைகள்' பெண் பொம்மை இணையவாசிகளை கோபப்படுத்தியுள்ளது. 

இன்று வரையில் உலகில் மனிதர்களாய் பிறந்தவர்களை மட்டும் தான் நாம் ஆண், பெண், இருபாலினர் என வேறுபடுத்தி உள்ளோம். ஆனால், இந்தான் தாக்கம் தற்போது குழந்தைகள் விளையாட்டும் பொம்மையிலும் வந்துவிட்டது எனபது பலரையும் ஆச்சர்யம் பட வைத்துள்ளது. ஆம், மைக்ரோ இணையதளமான ட்விட்டரில் வெளியாகியுள்ள ஒரு புகைப்படம் இணையத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. 

அந்த புகைப்படத்தில், பெண் தோற்றமுடைய பொம்மைக்கு ஆண்குறி உள்ளது மற்றும் அது 'திருநங்கைகள்' என்று கூறப்படுகிறது. இந்த பொம்மை ஒரு ரஷ்ய பொம்மைக் கடையில் காணப்பட்டது. அது கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்தும், அதன் புகைப்படம் சமூக ஊடகங்களில் பதிவு செய்ததிலிருந்து இந்த நிகழ்வு பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் சில மக்கள் அந்த பொம்மையைத் தாக்கி அதை "குறும்பு பொம்மை" என்று அழைக்கிறார்கள். அந்த புகைப்படத்தில், அந்த பொம்மை அழகான மஞ்சள் நிற முடியுடன் சிவப்பு மற்றும் மஞ்சள் போல்கா டாட் ஆடை அணிந்திருப்பதைக் காணலாம். ஆனால், பொம்மைகளின் ஆடையின் அடியில் ஆண்குறி இருப்பது போல் உருவாக்கபட்டுள்ளது. 

அநேகமாக உலகின் முதல் திருநங்கை பொம்மை, இதுவாகத்தான் இருக்கும் என நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சைபீரியாவில் உள்ள பிளானெட்டா இக்ருஷேக் (பிளானட் ஆஃப் டாய்ஸ்) கடை, கிரிடைலி.காம் படி, பொம்மையை விற்பனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. 

நெட்டிசன்களின் கருத்துக்கள் சில கீழே பதிவிடபட்டுள்ளது......  

 

Trending News