EPFO Alert: டிசம்பர் 31க்குள் இந்த வேலையை முடித்தால் நஷ்டத்தை தவிர்க்கலாம்

EPFO சந்தாதாரர்கள் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் இந்த முக்கியமான விஷயத்தை செய்யாவிட்டால்  7 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 23, 2021, 08:35 AM IST
EPFO Alert: டிசம்பர் 31க்குள் இந்த வேலையை முடித்தால் நஷ்டத்தை தவிர்க்கலாம் title=

புதுடெல்லி: புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடங்க உள்ள நிலையில், மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிக்கும் ஆர்வத்தில் சில முக்கியமான விஷயங்களை மறந்துவிட வேண்டாம். 

அது, எதிர்காலத்தில் பல பண இழப்புகளை ஏற்படுத்தலாம். வேலை பார்ப்பவர்கள் மறக்கக்கூடாத ஒரு முக்கியமான செய்தி இது.

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அதன் சந்தாதாரர்களை டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் இ-நாமினேஷன் (E-Nomination) செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது. 

இதைச் செய்யாவிட்டால், உங்களுக்கு 7 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்படலாம். EPFO இன் இ-நாமினேஷன் மூலம் கணக்கு வைத்திருப்பவரின் குடும்பம், சமூகப் பாதுகாப்பைப் பெறுகிறது.

ALSO READ | அரசு ஊழியர்களுக்கு 300 நாட்கள் Earned Leave!புதிய விதி எப்போது அமலுக்கு வரும்? 

EPF / EPS க்கு சந்தாதாரர்கள் எவ்வாறு இ-நாமினேஷனை தாக்கல் செய்யலாம் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

EPFO விதிகளின்ன்படி, நாமினியைத் தேர்ந்தெடுக்கவில்லை என்றால், உங்கள் பணத்தை திரும்பப் பெறும் சமயத்தில் சிக்கல் ஏற்படலாம். EPFO கடந்த ஆண்டு இ-நாமினேஷன் சேவையைத் தொடங்கினாலும், கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவரும் நியமன செயல்முறையை முடிக்கவில்லை. 

இபிஎஃப்ஓவின் விதிகளின்படி தற்போது, கணக்கு வைத்திருப்பவர் தனது பிஎஃப் கணக்கில் நாமினியை சேர்க்கவில்லை என்றால், அவர் பிஎஃப் தொகையை எடுக்க முடியாது. பணத்தை பெறுவதற்கு முன்னதாக இ-நாமினேஷன் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

EPFO உறுப்பினர்கள் பணியாளர் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டத்தின் (EDLI Insurance cover) கீழ் காப்பீட்டுத் தொகையைப் பெறுகிறார்கள். இத்திட்டத்தில், நாமினிக்கு அதிகபட்சமாக ரூ.7 லட்சம் காப்பீடு வழங்கப்படுகிறது. கணக்கு வைத்திருபவர், நாமினேஷன் படிவத்தைப் பூர்த்தி செய்து நியமனதாரரை நியமிக்காவிட்டால் சிக்கல் ஏற்படும். கணக்கு வைத்திருக்கும் EPFO உறுப்பினர் இறந்தால், இந்த திட்டத்தின் பயனை அவரது குடும்பத்தினர் பெறுவதில் சிக்கல்கள் ஏற்படும். எனவே ஆன்லைனில் எவ்வாறு இ-நாமினேஷன் செய்வது என்று தெரிந்துக் கொள்ளுங்கள்.

ALSO READ | pensioners: ஆயுள் சான்றிதழை சமர்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிப்பு

1. முதலில் EPFO ​​இன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.epfindia.gov.in/ க்குச் செல்ல வேண்டும்.
2. இங்கே நீங்கள் முதலில் 'சேவைகள்' விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
3. பிறகு 'For Employees' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
4. இப்போது 'Member UAN/Online Service (OCS/OTCP)' என்பதைக் கிளிக் செய்யவும்.
5. இப்போது UAN மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு உள்நுழையவும்.
6. இதற்குப் பிறகு 'Manage' என்பதில் 'இ-நாமினேஷன்' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
7. இதற்குப் பிறகு, 'Provide Details' என்ற தெரிவு திரையில் தோன்றும், அதை சேமிக்கவும்.  
8. குடும்பத்தினர் தொடர்பான விவரங்களைப் புதுப்பிக்க, 'ஆம்' என்பதைக் கிளிக் செய்யவும்.
9. இப்போது 'Add Family Details' என்பதைக் கிளிக் செய்யவும். ஒன்றுக்கு மேற்பட்ட நாமினிகளையும் சேர்க்கலாம்.
10. எந்த நாமினியின் பங்கில் எவ்வளவு தொகை வரும் என்பதை அறிவிக்க 'நாமினேஷன் விவரங்கள்' என்பதைக் கிளிக் செய்யவும். விவரங்களை உள்ளிட்ட பிறகு 'Save' என்பதைக் கிளிக் செய்யவும்
11. OTP ஐ உருவாக்க 'e-Sign' என்பதைக் கிளிக் செய்யவும். ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.
12. குறிப்பிட்ட இடத்தில் OTP ஐ உள்ளிட்டு சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.

ALSO READ | அரசு ஊழியர்களுக்கு 300 நாட்கள் Earned Leave!புதிய விதி எப்போது அமலுக்கு வரும்? 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News