அடிக்கடி உங்கள் துணையுடன் சண்டை வருகிறதா? சரிசெய்ய டிப்ஸ் இதோ!

எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் சரி இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபடும் முயற்சியை விடுத்தது அமைதியாக மனம் விட்டு பேசுவதையே முதல் நோக்கமாக கொண்டிருங்கள்.  

Written by - RK Spark | Last Updated : Oct 22, 2022, 11:09 AM IST
  • உறவில் சிலர் அடிக்கடி சண்டையிட்டு கொள்வார்கள்.
  • சிலரது சண்டைகள் சில நிமிடங்களில் முடிந்து விடும்.
  • ஒரு சிறு விஷயங்கள் கூட சில சமயங்களில் வாக்குவாதத்திற்கு வழிவகுக்கும்.
அடிக்கடி உங்கள் துணையுடன் சண்டை வருகிறதா? சரிசெய்ய டிப்ஸ் இதோ! title=

பெற்றோர்கள், உடன்பிறந்தவர்கள், நண்பர்கள், காதலர்கள் என எந்த உறவிலும் சண்டை சச்சரவுகள் ஏற்படுவது பொதுவான ஒன்று தான், சிலர் எப்போதாவது சண்டையிட்டு கொள்வார்கள், சிலர் அடிக்கடி சண்டையிட்டு கொள்வார்கள்.  உங்களுக்கு பிடித்தவர்களுடன் சண்டையிட பல்வேறு காரணங்கள் இருக்கலாம், அதற்காக மனது புண்படும்படியான கடுமையான வார்த்தைகளை கூறிவிடாமல் சாமர்த்தியமாக சண்டையை நிறுத்த முயற்சிப்பது உங்கள் உறவை பலப்படுத்தும்.  சண்டை சாதாரணமான ஒன்று தான், அதை நாம் எப்படி கொண்டு செல்கிறோம் என்பதை பொறுத்துதான் அதன் முடிவு அமைகிறது.  சிலரது சண்டைகள் சில நிமிடங்களில் முடிந்து விடும், விரைவாகவே இயல்பு நிலைக்கு திரும்பி விடுவார்கள், ஆனால் சிலரது சண்டையோ அந்த உறவுக்கே முற்றுப்புள்ளி வைத்துவிடும் அளவிற்கு கொண்டு சென்றுவிடும்.  இப்போது உறவில் ஏற்படும் சிக்கல்களை சுமூகமாக எப்படி தீர்க்கலாம் என்பதை பார்ப்போம்.

மேலும் படிக்க | உங்கள் ஆதார் நம்பரில் இதுவரை வாங்கப்பட்ட மொபைல் நம்பரை பார்ப்பது எப்படி?

 

- எந்தவொரு வாக்குவாதமாக இருந்தாலும் சரி அதில் அனைவருக்கும் மரியாதை தரவேண்டியது அவசியம், சுயமரியாதையை இழப்பது யாருக்கும் பிடிக்காது.  இப்போது உங்கள் துணை உங்களை கேலியாகவோ, இழிவாக பேசினாலோ அல்லது திட்டினாலோ அவரிடம் அப்படி பேசாமல் நிறுத்த சொல்லுங்கள் இல்லாவிட்டால் அந்த இடத்தை விட்டு சென்றுவிடுங்கள்.

- ஒரு சிறு விஷயங்கள் கூட சில சமயங்களில் வாக்குவாதத்திற்கு வழிவகுக்கும் அல்லது கடந்த காலத்தில் நடந்த சில சம்பவங்கள் பிரச்சனையை ஏற்படுத்தலாம்.  அந்த சமயத்தில் உங்கள் துணையுடன் நீங்கள் வாதிடுவதை விட பிரச்சனையின் உண்மைத்தன்மை குறித்து அவரிடம் அமைதியாக பேசுங்கள்.

- உறவில் வரும் வாக்குவாதத்தில் யார் வெற்றி பெறுகிறார் என்பது முக்கியமல்ல, பிரச்னையை சுமூகமாக முடிப்பது தான் முக்கியம்.  ஒரு பிரச்சனைக்கு உங்களால் தீர்வு கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள்.

- எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் சரி இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபடும் முயற்சியை விடுத்தது அமைதியாக மனம் விட்டு பேசுவதையே முதல் நோக்கமாக கொண்டிருங்கள்.

மேலும் படிக்க | எச்சரிக்கை: உடனடியாக ஆதாரில் இந்த அப்டேட்டை பண்ணிடுங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News