Thai Amavasya: இன்றும் தொடரும் தை அமாவாசை தர்ப்பணம்! காரணம் இதுதான்....

இந்துக்களின் கலாச்சாரத்தில் முக்கியமான தை அமாவசை நேற்றும் இன்றும் பக்தி சிரத்தையுடனும் பாரம்பரியத்துடனும் அனுசரிக்கப்படுகிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 1, 2022, 11:11 AM IST
  • திருக்கடையூரில் தை அமாவாசை
  • தமிழகத்தில் பக்தி சிரத்தையுடன் தை அமாவாசை கொண்டாட்டங்கள்
  • நீர்நிலைகளில் தர்பணத்திற்காக பெருமளவில் கூடும் மக்கள்
Thai Amavasya: இன்றும் தொடரும் தை அமாவாசை தர்ப்பணம்! காரணம் இதுதான்....  title=

புதுடெல்லி: அமாவாசை திதி இன்றும் தொடர்வதால்,முன்னோர்களுக்கான தர்பணம் செய்யும் சடங்குகள் இன்றும் தொடர்கின்றன.

ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை நாட்களில் நதிகளிலும், கடல்களிலும் பக்தர்கள் கூடுவது வழக்கம். இந்த நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் நன்மை கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

நேற்று தொடங்கிய தை அமாவாசை (Thai Amavasya), இன்றும் தொடர்கிறது. காரணம் நேற்று மதியம் 2 மணிக்கு திதி தொடங்கியதால், இன்று மதியம் 2 மணி வரை அமாவாசை பூசைகள் நடைபெறும்.

முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக மக்கள் நீர்நிலைகளில் வந்து குவிகின்றனர். பக்தனுக்காக அமாவாசை தினத்தன்று முழு நிலவை வானில் உதிக்கச் செய்த தெய்வம் திருக்கடையூர் அன்னை அபிராமி. இந்த அற்புதச் சம்பவம் நிகழ்ந்த நாள் தை அமாவாசை.

DEVOTIONAL

தை அமாவாசை தினமான இன்று அன்னை அபிராமியை வணங்கி அனைத்து செல்வங்களும் பெற்று நீடூழி வாழ்வோம் என்பது நம்பிக்கை.

திருக்கடையூர் அன்னை அபிராமிவல்லி மீது கொண்டிருந்த பட்டர், தன்மீது கொண்டிருந்த அபிமானத்தையும் பக்தியையும் உலகறியச் செய்த அன்னை அபிராமியின் திருவிளையாடல் நிகழ்ந்த தினம் தை அமாவாசை.

ALSO READ | அமாவாசையை பவுர்ணமியாக்கிய அன்னை அபிராமியின் திருக்கடையூர் திருவிளையாடல்

தை அமாவாசை (Thai Amavasya) தினத்தன்று, நமது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, பின்  காகத்திற்கு உணவு படைத்து, அது சாப்பிட்ட பின்னரே வீட்டில் உள்ளவர்கள் சாப்பிட்டு விரதத்தை முடிப்பார்கள். காகங்கள் நாம் படைத்ததை எடுத்துக்கொண்டால் முன்னோர்களின் ஆசி கிடைக்கிறது என்பது நம்பிக்கை.

ALSO READ | Spiritual Information: வீட்டின் எந்தெந்த இடங்களில் தீபம் ஏற்ற வேண்டும்

முன்னோர்களுக்கு திதி கொடுப்பதன் மூலம் அவர்களது ஆசி கிடைத்து, தீராத பிரச்சனைகள் தீரும். சனீஸ்வர பகவானின் வாகனமான காகம் எமலோகத்தின் வாசலில் இருக்கும் என்றும், எமனின் தூதுவனான காகத்துக்கு சாதம் வைத்தால் நமது முன்னோர்கள் மன அமைதியடைந்து நமக்கு ஆசி வழங்குவார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

அனைவரும் தங்கள் வசதிக்கேற்ப தங்களின் குடும்ப முறைப்படி வீட்டில்,  நதிக்கரையில், அல்லது  சமுத்திரக் கரைக்கு சென்று முன்னோருக்குச் செய்யவேண்டிய வழிபாட்டினை செய்யலாம். 

நமது வாழ்வில் வரும்  இன்பங்கள், இன்னல்கள் யாவும் நாம் எமது முன் ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியத்துக்கு ஏற்ப  அமைகிறது. அதில் பித்ருக்களுக்கான காரியமும் ஒன்றாகும்.

எனவே, முன்னோர்களின் ஆசிகளை முழுமையாக பெற சிரத்தையுடன் அவர்களுக்கான காரியங்களை செய்ய வேண்டும். என ஜோதிட சாஸ்திரம் கூறுகின்றது. முன்னோரின் ஆசி பெறும் முக்கியமான நாள், தை அமாவாசை (Thai Amavasya) தினமான இன்று...

ALSO READ | கஜமுகன் கணபதி முழுமுதற் கடவுளான வரலாறு 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News