சூர்யா 36: NGK என்றால் என்ன?- வெளியான புதிய தகவல்!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான நடிகர் சூர்யா. "தானா சேர்ந்த கூட்டம்" படத்திற்கு பிறகு முதல் முறையாக செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வருகிறார் நடிகர் சூர்யா. இது சூர்யாவுக்கு 36_வது படமாகும். 

Last Updated : Mar 6, 2018, 11:01 AM IST
சூர்யா 36: NGK என்றால் என்ன?- வெளியான புதிய தகவல்! title=

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான நடிகர் சூர்யா. "தானா சேர்ந்த கூட்டம்" படத்திற்கு பிறகு முதல் முறையாக செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வருகிறார் நடிகர் சூர்யா. இது சூர்யாவுக்கு 36_வது படமாகும். 

இந்நிலையில், நேற்று இயக்குனர் செல்வராகவனின் பிறந்த நாளை முன்னிட்டு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தின் தலைப்பு வெளியிட்டு இருந்தார். இதனை நடிகர் சூர்யா தந்து ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். 

படத்தின் தலைப்பு என்.ஜி.கே (NGK) என பெயரிடப்பட்டுள்ளது. இந்த வருட தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

NGK என்றால் என்ன என்பது படக்குழு தரப்பில் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் NGK என்றால் நந்த கோபாலன் குமரன் என்பது அர்த்தம் என இணையத்தில் தகவல்கள் வெளியாகி பரவி வருகிறது.

Trending News