“பார்ட்டி” : சூர்யா, கார்த்தி குரலில் ‘ச்சா ச்சா ச்சாரே’ பாடல் வெளியீடு! Watch

வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் “பார்ட்டி” படத்தின் ‘ச்சா ச்சா ச்சாரே’ எனும் பாடல் வெளியாகியுள்ளது.

Last Updated : Jul 3, 2018, 11:36 AM IST
“பார்ட்டி” : சூர்யா, கார்த்தி குரலில் ‘ச்சா ச்சா ச்சாரே’ பாடல் வெளியீடு! Watch title=

வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் “பார்ட்டி” படத்தின் ‘ச்சா ச்சா ச்சாரே’ எனும் பாடல் வெளியாகியுள்ளது.

அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் “பார்ட்டி”. இந்த படத்தில் சத்யராஜ், ஜெயராம், நாசர், மிர்ச்சி சிவா, ஜெய், சம்பத், சந்திரன், நிவேதா பெத்துராஜ், ரம்யா கிருஷ்ணன், சஞ்சிதா ஷெட்டி மற்றும் ரெஜினா என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. 

இந்த படத்திற்கு பிரேம்ஜி இசை அமைத்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு  ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்கிறார், பிரவீன்.கே.எல். படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். 

சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.  தற்போது, படத்தில் இடம்பெறும் ‘ச்சா ச்சா ச்சாரே’ எனும் பாடலை வெளியிட்டுள்ளனர். இந்த பாடலை நடிகர்கள் சூர்யா, கார்த்தி சேர்ந்து பாடியுள்ளனர். தற்போது இப்பாடல் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

Trending News