தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு: இன்று முதல் முன்பதிவு

புத்தாண்டு, பொங்கல் பண்டிகை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது தெற்கு ரயில்வே.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 22, 2018, 08:37 AM IST
தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு: இன்று முதல் முன்பதிவு title=

அடுத்த மாதம் புத்தாண்டு, பொங்கல் பண்டிகை வருவதால் தலைநகரத்தில் வேலை செய்பவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று பண்டிகையை கொண்டாட வசதியாக புத்தாண்டு, பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூரிலிருந்து திருநெல்வேலிக்கு சுவிதா சிறப்பு ரயில் ஜனவரி 12, 18 25 மற்றும் பிப்ரவரி 1, 8, 15, 22 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது. திருநெல்வேலியில் இருந்து சென்னை எழும்பூருக்கு ஜனவரி 3, 6, 10, 15, 16, 27 மற்றும் பிப்ரவரி 17, 24 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதற்க்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்கியது.

மேலும் எங்கெல்லாம் சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படுகிறது என்பதுக் குறித்த விவரங்கள் கீழே தரப்பட்டு உள்ளது.

 

 

 

 

 

 

 

Trending News