Relationship Tips: இன்றைய காலகட்டத்தில் காதல் உறவை தொடர்வது என்பது மிகவும் கடினமான ஒன்றாக மாறிவிட்டது. ஆண் - பெண் உறவுச் சிக்கல் ஒன்றும் புதிதில்லை என்றாலும் நவீன கால சிக்கல்களும் சேர்ந்து ஒருவரின் காதல் வாழ்வில் பலத்த பாதிப்புகளை ஏற்படுத்துகிறது எனலாம். பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சேட் என ஒவ்வொரு சமூக வலைதளங்களும் இன்றைய காலகட்டத்தில் கடும் தாக்கத்தை செலுத்துகிறது.
அந்த வகையில் காதல் உறவில் ஆண் - பெண் மட்டுமின்றி ஒரு மூன்றாவது நபரின் மூலமாக கூட பிரச்னை வரலாம். அப்படி பார்த்தோமானால் இன்றை காலத்தில் மொபைலும், சமூக வலைதளங்களும்தான் காதல் உறவுக்கு ஒரு முக்கிய எமனாக உள்ளது. முன்னெல்லாம், காதலுக்கு பெற்றோர், ஜாதி, மதம், வர்க்கம், மொழி உள்ளிட்டவை பிரச்னையாக வரும் ஆனால் இப்போது இவை அனைத்துடன் மொபைலும், சமூக வலைதளங்களும் காதலில் பெரிய பிரச்னையை ஏற்படுத்தும் எனலாம்.
சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தனது கணவன் குறித்து மனைவி கூறுகையில்,"என் கணவர் என்னுடன் இரவில் தூங்கி சுமார் 8 மாதங்கள் இருக்கும். அவர் இரவு முழுவதும் பக்கத்து அறையில் அவரின் நண்பர்கள் உடன் வீடியோ கேம் விளையாடுகிறார்" என மன வருத்தத்தில் பேசியிருந்தார். இதை கேட்கும்போது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.
மேலும் படிக்க | காதலில் பிரேக்-அப் வந்தால்... இந்த 6 வாழ்க்கை பாடங்களை கற்றுக்கொள்வீர்கள்...!
உங்கள் காதல் உறவை உங்களுக்கே தெரியாமல் மொபைலும், சமூக வலைதளங்களும் பாதித்து கொண்டிருக்கலாம். அதுகுறித்த விழிப்புணர்வு இளைஞர்களுக்கும், காதலர்களுக்கும் இப்போது குறைவாக இருக்கும். எனவே, மொபைல் மற்றும் சமூக வலைதளங்களினால் உங்கள் காதல் பாதிக்கப்படாமல் இருக்க சில வழிமுறைகள் இருக்கின்றன. அவற்றை முறையாக கவனத்தில்கொண்டு பின்பற்றுவதன் மூலம் நீங்கள் காதல் உறவில் பிரச்னை இல்லாமல் இருக்கலாம்.
1. காதலன்/காதலி உடன் நேரம் செலவழிக்கும் போது பலருக்கும் மொபைலை நோண்டும் பழக்கம் இருக்கும். அதாவது, புதிய மெசேஜ் வருவதை பார்ப்பது, பேஸ்புக்கை பார்ப்பது ஆகியவற்றில் கவனம் செலுத்துவதால் உங்களின் பார்ட்னர் தனிமையாக உணர்ந்து உங்கள் மீது வெறுப்பு கொள்ள வாய்ப்பிருக்கிறது. மேலும், இது உங்களின் உறவில் பிளவை உண்டாக்கலாம்.
2. எப்போதும் மொபைலில் அதிக நேரம் செலவழித்தால் உங்கள் பார்ட்னர் உடன் நேரம் செலவழிக்க இயலாது. அப்படி நீங்கள் நேரம் செலவழிக்க தவறும் போது காதல் உணர்வு மங்கும். உறவு முறியவும் வாய்ப்பு ஏற்படும்.
3. சமூக வலைதளங்களை பார்த்து மற்றவர்களுடன் உங்கள் பார்ட்னரை ஒப்பிட்டு பேசுவதை தவிர்க்கவும். இது மிகப்பெரிய தவறாகும். எப்போதும் ஒவ்வொருவரின் வாழ்வும் வித்தியாசமானது என்பது புரிந்துகொள்ள வேண்டும்.
4. இப்போதெல்லாம் காதலன், காதலிக்கு கருத்து வேறுபாடு வர முக்கிய காரணம் மொபைல்தான். நீங்கள் சரியான நேரத்திற்கு கால் செய்யாவிட்டாலும், மெசேஜ் செய்யாவிட்டாலும் உறவில் பெரிய பிரச்னை வரலாம்.
எனவே, இந்த வழிமுறைகளை பின்பற்றி இந்த தவறுகளை தவிர்த்து, பார்ட்னருடன் நேரம் செலவிட்டால் உங்களுக்கு பிரச்னையே வராது.
மேலும் படிக்க | மூளையை காலி செய்யும் சிப்ஸ் - ஐஸ்க்ரீம்... எச்சரிக்கும் வல்லுநர்கள்..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ